ரத்தத்தை பாலாக கொடுக்கும் பறவை! மனதை கனக்க செய்யும் காட்சி
பூநாரை (Flamingos / Flamingoes) அல்லது செங்கால் நாரை என்பது நாரை வகைப் பறவையாகும். இந்த பறவைகள் ஆழமற்ற ஏரிகள், சதுப்புநில சதுப்பு நிலங்கள் மற்றும் ஆப்பிரிக்கா, ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் மணல் தீவுகளில் வாழ்கின்றன. ஃபிளமிங்கோக்களில் 6 இனங்கள் உள்ளன.
பிளமிங்கோக்கள் மண்ணால் ஆன கூட்டில் குஞ்சு பொரிக்கும். தாய் மற்றும் தந்தை என இரண்டு பறவைகளும் முட்டையை அடைகாக்கிறார்கள்.
குஞ்சு பொரித்த சில நாட்களுக்குப் பிறகு பெற்றோர்கள் இருவரும் தங்கள் குஞ்சுக்கு கொழுப்புகள் மற்றும் புரதங்கள் நிறைந்த பால் போன்ற பொருளைக் கொண்டு உணவளிக்கத் தொடங்குவார்கள்.
இங்கு குறித்த பறவை ஒன்று தனது குஞ்சுக்கு ரத்தத்தினை பாலாக கொடுக்கும் காட்சியினை காணலாம். ஆனால் இவை நாம் காண்பதற்கு ரத்தமாக தெரிந்தாலும், இதுதான் அதற்கு கொடுக்கப்படும் பால் என்று சொல்லப்படுகின்றது.
மனம் கனக்க வைக்கும் குறித்த காட்சியினை கீழே காணலாம்.