பக்தி சூப்பர் சிங்கரில் அரங்கையே மெய்சிலிர்க்க வைத்த பாடல்.. தொகுப்பாளரால் கிடைத்த அங்கீகாரம்
இந்த வாரம் திருத்தலம் பக்தி பாடல்கள் சுற்றில் இளம் பெண்ணுடன் தொகுப்பாளர் பாடிய பாடல் அரங்கத்தையே மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
பக்தி சூப்பர் சிங்கர்
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக செல்லும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிறுவர்களுக்கான சூப்பர் சிங்கர் சீசன் 10 வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதில் காயத்திரி டைட்டில் வின்னராக தெரிவு செய்யப்பட்டார்.
அடுத்து, பெரியவர்களுக்கான சூப்பர் சிங்கர் சீசன் 10 என ஆரம்பமாகும் என எதிர்பார்த்த வேளையில் பக்தி பாடல்கள் அடங்கிய பக்தி சூப்பர் சிங்கர் என்ற புதிய நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது.
ஆசையை நிறைவேற்றினாரா அனுராதா?
இந்த நிலையில், பக்தி பாடல்கள் வாயிலாக தங்களின் திறமைகளை போட்டியாளர்கள் காட்டி வருகிறார்கள். பக்தி பாடல்கள் என கூறும் பொழுது இந்து சமயத்தை சார்ந்தவர்கள் அதிகமாக போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.
ஆனால் இந்த நிகழ்ச்சியில் இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் இந்துக்கள் என மூன்று சமயத்திலுள்ளவர்களும் கலந்து கொண்டு, தங்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த வகையில், பெண்ணொருவர் பாடிய பாடல் அரங்கத்திலுள்ளவர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. அத்துடன் அவரின் ஆசையையும் தொகுப்பாளர் நிறைவேற்றியுள்ளார்.
இதனை தொடர்ந்து குறித்த பெண்ணிற்கு Golden performance கொடுத்து நடுவர்களால் புதிய அங்கீகாரம் கொடுக்கப்பட்டது. இவர் கடந்த வாரங்களில் மாதா பாடல் பாடி ரசிகர்களை தன்வசப்படுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |