அன்னாசியில் சட்னி செய்யலாமா? வெறும் 10 நிமிடம் போதும்
அன்னாசி பழம் சாப்பிடுவதால் சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். இப்பழத்தில் உள்ள மாங்கனீஸ் உடலில் ஆன்டி ஆக்சிடன்ட்களை அதிகரிக்கின்றது.
இதய நோய்கள் மற்றும் மாரடைப்பில் இருந்து பாதுகாப்பளிக்கிறது. இப்பழத்தில் நிறைந்து காணப்படும் ஏனைய வைட்டமின்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
சோர்வின்றி செயல்பட, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அன்னாசி பெரிதும் துணைப்புரிகின்றது.
இத்தனை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த அன்னாசிப்பழத்தை கொண்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சுவையான அன்னாசி சட்னி எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
1 பெரிய அன்னாசிப்பழம்
உப்பு தேவையான அளவு
1/2 கப் சர்க்கரை
1 மற்றும் 1/2 ஒரு கப் தண்ணீர்
1 டீஸ்பூன் மிளகாய் செதில்கள்
1/2 தேக்கரண்டி மஞ்சள்
1/2 இலவங்கப்பட்டை
ஏலக்காய் 4
கறிவேப்பிலை (விரும்பினால்) 3 டீஸ்பூன் எண்ணெய்
செய்முறை
முதலில் அன்னாசியை சுத்தம் செய்து சிறிய துண்டுகளைாக வெட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், ஏலக்காய் ஆகியவற்றை எண்ணெயில் போட்டு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை கொதிக்க விடவும்.
வெட்டி வைத்த அன்னாசி துண்டுகளை போட்டு சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் இருந்து இறக்கி ஆறவிட வேண்டும். பின்னர் காற்று புகாத போத்தலில் அடைத்து குளிர்சாதன பெட்டியில் சேமித்து வந்தால் சுவையான அன்னாசி சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |