நெற்றியில் கொசு கடித்து உயிரிழந்த இளம் விமானி பெண் - உறவினர்களை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!
இளம் விமானி பெண் ஒருவர் கொசு கடித்ததால் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் Suffolk என்கிற இடத்தை சேர்ந்தவர் Oriana Pepper(21) என்ற இளம்பெண் பெல்ஜியம் நாட்டில் விமான பயிற்சியாளராக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இவரை கடந்த மாதத்தில், கொசு ஒன்று கடித்துள்ளது. அதன் தாக்கம் அதிகமாக இருந்ததால் பின்னர் இவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார். மருத்துவர்கள் இவருக்கு பரிசோதனை மேற்கொண்டனர்.
பரிசோதனைக்கு பிறகு இவருக்கு எதிர்ப்பு மருந்துகளை கொடுத்து வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள். ஆனாலும், கொசு கடித்த இடம், பெரிதும் வீக்கம் அடைந்து இருக்கிறது.
அடுத்த இரண்டு நாட்களில் Oriana திடீரென மயங்கி விழுந்ததாக சொல்லப்படும் நிலையில் அவரை உடனடியாக காதலன் அழைத்து சென்றிருக்கிறார்.
கொசு கடித்து இறப்பா?
ஆனாலும், மூன்று நாட்கள் சிகிச்சைக்கு பின் அவர் உயிரிழந்துள்ளார். குறிப்பாக அவரின் மரணத்திற்கு கொசுவின் கடித்ததினால் தானா என்ற குழப்பம் இருந்து வந்துள்ளது.
மேலும், அந்த பெண்ணை நெற்றியில் கடித்த கொசு நோய் தொற்றை உருவாக்கி அவரது மூளைக்கு பரவி இந்த உயிரிழப்பை ஏற்படுத்தியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்த வழக்கை விசாரணை செய்த அதிகாரிகள், இப்படி ஒரு சம்பவம் புதிதாக உள்ளது எனத்தெரிவித்துள்ளனர்.