ஒரே ஒரு ஐஸ்கிரீமிற்காக பைலட் செய்த அநியாயம்: பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
ஒரே ஒரு ஐஸ்கிரீம் வாங்குவதற்காக பைலட் (34) ஒருவர் மாகாணத்தின் மத்தியில் ஹெலிகாப்டரை தரையிறக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடா நாட்டின் டிஸ்டேல் நகரில் சுமார் 3000 பேர் வாழ்ந்து வருகிறார்கள். கடந்த மாதம் 31ம் தேதி இந்த நகரின் மையப்பகுதியில் சிவப்பு வண்ணம் பூசப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்று தரையிறக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்த பொதுமக்கள் ஒன்றும் புரியாமல் திகைத்துப் போயுள்ளனர்.
இதற்கிடையில் அந்த மாகாணத்தின் மருத்துவ விமான ஆம்புலன்ஸில் பூசப்பட்டிருக்கும் அதே வண்ணம் இதே ஹெலிகாப்டரில் இருந்ததால் மக்கள் குழம்பியுள்ளனர்.
மேலும், அவசர மருத்துவ உதவிக்காக ஒருவேளை ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டிருக்கலாம் என்று அவர்கள் நினைத்துள்ளனர்.
ஆனாலும், இதுகுறித்து பொலிஸ் கட்டுப்பாடு அறைக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் இது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்பொழுது வெளியான உண்மை காரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆம் குறித்த ஹெலிகப்டரின் பைலன் ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்பதற்காக தரையிறக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து அவர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்ததோடு, எந்தவொரு முன் அறிவிப்பும் இல்லாமல் ஹெலிகப்டரை தரையிறக்கியதற்கு செப்டம்பர் 7 தேதிக்குள் விளக்கம் அளிக்க கோரியுள்ளனர்.
இதுகுறித்து பொலிசார் கூறுகையில், “அவரிடம் ஹெலிகாப்டரை இயக்குவதற்கான லைசன்ஸ் இருந்தாலும், பார்க்கிங் இல்லாத இடத்தில் அவர் ஹெலிகாப்டரை தரை இறக்கியது தவறு. அதேபோல ஐஸ்கிரீம் சாப்பிடுவது ஒன்றும் அவசரத்தேவை இல்லை” என தெரிவித்தனர்.
இப்படி ஐஸ்கிரீமிற்காக ஹெலிகாப்டரை மாகாணத்தின் மத்தியில் நிறுத்தி மக்களை கதிகலங்க வைத்த பைலட் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.