ஊறுகாய் அதிகமாக சாப்பிடுவது நன்மையா? தீமையா? தெரிஞ்சுக்கோங்க
ஊறுகாய் என்பது மரக்கறிகள் அல்லது பழங்களை பதப்படுத்தி செய்யப்படும் ஒருவகை உணவாகும். சிலர் ஊறுகாய் இல்லாமல் உணவு உண்ணாதவர்களுக்கு இந்த பதிவு மிகவும் உதவியாக இருக்கும்.
ஊறுகாயை அளவுக்கு அதிகமாக எடுத்து கொண்டால் அது எமது உடலில் பல பிரச்சனைகள் வருவதற்கு வழி வகுக்கும்.
இதை அளவாக உண்பதால் சில நன்மைகள் இருந்தாலும், ஆனால் அதை அதிகமாக உட்கொள்ளக் கூடாது. இந்த பதிவில் ஊறுகாயை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் பிரச்சனை பற்றி பார்கலாம்.
நன்மை
ஊறுகாயை நொதி்த்தல் செயற்பாட்டின் மூலம் தயாரிக்கப்படுவதால் இதில் லாக்டிக் அமிலம் அதிகளவில் உருவாகும். அதனால் மனிதர்களுக்கு குடலில் இருக்கும் ஆரோக்கியமான நுண்நுயிர்களை வளர இது உதவுகிறது.
செரிமான பிரச்சனை இருந்தால் அதை சரி செய்யவும் உதவுகிறது. ஊறுகாய் பெரும்பாலும் புளிப்பு மற்றும் காரத்தால் செய்யப்டுகிறது.
அந்த வகையில் ஊறுகாயை சாப்பிட்டால் எமக்கு பசி அதிகமாக வரும். ஊறுகாய்க்கு பயன்படும் மரக்கறிகள் காய்கறிகள் போன்றவற்றில் அதிகளவில் வைட்டமின்களும் தாதுப்பொருட்களும் இருப்பதால் உடலுக்கு இவை சக்தியை தருகிறது. மற்றும் இதில் உள்ள ஆன்டி ஆக்சைட்டுக்கள் செல்களின் சேதத்தை கட்டுப்படுத்துகிறது.
தீமைகள்
ஊறுகாயில் அதிக உப்புக்கள் போட்டு செய்யப்படுவதால் நாம் அதிகளவான உப்புக்களை உட்கொள்கிறோம்.
இதன் காரணமாக இதய நோய்கள் உயர் ரத்த அழுத்தம் உண்டாக வாய்ப்பு உள்ளது. இதில் அதிகளவு எண்ணெய் சேக்கப்படுவதால் அதிக உடல் பருமன் வரும்.
ஊறுகாய் நிறைய நாட்களுக்கு வைத்து உண்ணப்படுவதால் அதில் பாக்டீரீயாக்கள் வளரும். இந்த நேரத்தில் இதை உண்ணும் போது நாம் உண்ணும் உணவை கூட இது விஷமாக மாற்றும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |