சின்னஞ்சிறு விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்! மரணத்தை தவிர அனைத்திற்கும் மருந்துண்டு
தெற்கு மற்றும் தென்மேற்கு ஆசியாவைத் தாயகமாக கொண்ட மூலிகை தாவரமானது கருஞ்சீரகம்,
மரணத்தை தவிர அனைத்திற்கும் மருந்துண்டு என குறிப்பிட்டுள்ளார் நபிகள் நாயகம்.
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உடலின் அனைத்து பாகங்களுக்குமான மருந்து இதில் உண்டு என்ற பெருமை கொண்டது கருஞ்சீரகம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய Thymoquinone, என்ற வேதிப்பொருள் கருஞ்சீரகத்தில் உண்டு, கெட்ட கொழுப்பை கரைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கக்கூடியது.
ஆஸ்துமா சுவாசப் பிரச்சனைகள், இதயநோய், புற்றுநோயை குணப்படுத்தக்கூடிய சக்தி வாய்ந்தது கருஞ்சீரகம்.
சின்னஞ்சிறு கருமை நிறம் கொண்ட இந்த விதையில் ஏராளமான மருத்துவ குணங்கள் கொட்டிக்கிடக்கின்றன.
செரிமான சக்தியை அதிகரித்து வயிற்றுப்போக்கு, அஜீரணம் போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாகிறது.
வெந்நீர் கொண்டு கருஞ்சீரகத்தை அரைத்து தலைவலிக்கும், மூட்டு வீக்கத்துக்கும் பற்றுப்போட்டால் சரியாகிவிடும்.
கருஞ்சீரகப்பொடியை நீராகாரத்துடன் 3ல் இருந்து 7 நாட்கள் காலையிலும் மாலையிலும் சாப்பிட்டு வந்தால் விஷப்பூச்சிக்கடி சரியாகும்.
50 மிலி தேங்காய் எண்ணெயில் ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப்பொடியை போட்டு சூடாக்கி இரண்டு சொட்டு மூக்கில்விட்டால் மூக்கடைப்பு சரியாகும்.
ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப்பொடியை வெந்நீர், தேன் கலந்து பருகினால் சிறுநீரக கற்கள், பித்தப்பை கற்கள் கரையும், காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகள் சாப்பிட வேண்டும்.
ஒரு டீஸ்பூன் கருஞ்சீரக பொடியுடன் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வர பிரசவத்திற்கு பின்னர் கருப்பையில் சேரும் அழுக்குகள் நீங்கும்.
கருஞ்சீரகத்தை தேன் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும், நினைவாற்றல் பெருகும்.
புதினா இலைகளுடன் கருஞ்சீரகத்தை சேர்த்து பயன்படுத்தி வர அல்சைமர் நோய்க்கு மருந்தாகும்.
ஒரு கப் தயிரில் அரை டீஸ்பூன் கருஞ்சீரக எண்ணெய் கலந்து தினமும் இரண்டு முறை பற்களில் தேய்த்து வர பல் தொடர்பான பிரச்சனைகள் சரியாகும்.