பறக்கும் விமானத்தில் ரகளையில் ஈடுப்பட்ட பயணி! கருப்பு பட்டியலில் அடைப்பு; அதிர்ச்சி வீடியோ
பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் இருந்து துபாய் நோக்கி புறப்பட்ட சர்வதேச விமான நிறுவனத்தின் பி.கே.-283 ரக விமானம் நடுவானில் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென்று பயணி ஒருவர் எழுந்து விமான ஊழியர்களிடம் மோதலில் ஈடுபட்டார்.
இதன்பின், அவர் இருக்கைகளை குத்தியு, விமான ஜன்னலை சேதப்படுத்தியும் கால்களை கடுமையாக உதைத்துள்ளார்.
தொடர்ந்து, இருக்கைகளின் நடுவில் பயணிகள் உள்ளிட்டோர் நடந்து செல்லும் பகுதியில் காலை நீட்டி குப்புற படுத்து கொள்வது போன்ற பல விசித்திர செயல்களிலும் ஈடுபட்டு உள்ளார்.

இதனால், அதிர்ந்துபோன விமான பணியாளர்கள் சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக அவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
தொடர்ந்து விமான சட்டத்தின்படி, விரும்பத்தகாத வேறு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அந்த பயணியை இருக்கை ஒன்றில் கயிறால் கட்டி வைத்து உள்ளனர்.
இறுதியாக, விமானம் துபாயில் இறங்கியதும் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பயணியை தங்களது காவலுக்கு கொண்டு சென்று உள்ளனர்.
இந்த சம்பவம் எதிரொலியாக அந்த பயணியை பாகிஸ்தான் விமான நிறுவனம் கருப்பு பட்டியலில் அடைத்து வைத்துள்ளது.
Passenger on PIA Flight from Peshawar to Dubai was deported back to Pakistan after he damaged planes windows, during flight he was annoying other passengers!! pic.twitter.com/x7L4S7j5i3
— Tanveer Khatana (@tanveer_khatana) September 18, 2022