இரவில் கையடக்கத் தொலைபேசியை பக்கத்தில் வைத்து தூங்குபவரா நீங்கள்?
அதிகமான கையடக்கத் தொலைபேசி பாவனையால் எவ்வளவு தீமைகளை ஒவ்வொருவரும் முகம் கொடுக்கின்றனர் என்பதை அன்றாடம் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றோம்.
இன்றைய உலகில் அனைவருக்குமே கையடக்கத் தொலைபேசிதான் உலகம் என்று ஆகிவிட்டது.
கையடக்கத் தொலைபேசியை அதிகமாக பயன்படுத்துவதே உடலுக்கும் மனதுக்கும் கெடுதலை விளைவிக்கும் என்று கூறும்போது, இரவில் உறங்கும்போது பக்கத்தில் வைத்து உறங்கினால் எப்படியிருக்கும்?
தீமைகள்
உறங்கும்போது கையடக்கத் தொலைபேசி அருகிலிருந்தால் தூக்கமின்மை, தலைவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.
தொலைபேசியிலிருந்து வரும் கதிர்வீச்சு உடலில் தேவையில்லாத செல்களை தூண்டுவதால் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வரும்.
உறங்கும்போது தொலைபேசியை எப்படி வைக்க வேண்டும்?
தூங்கும் இடத்துக்கும் தொலைபேசிக்கும் போதுமான தூரம் இருக்க வேண்டும்.
தூங்கும்போது தொலைபேசியின் இணைய துண்டிப்பை நிறுத்த வேண்டும்.
சட்டை பையில் தொலைபேசியை வைக்கலாமா?
சட்டைப் பையில் தொலைபேசியை வைத்திருப்பதானது, நம்மை சோர்வு நிலையில் வைத்திருக்கும்.
மன அழுத்த பிரச்சினை ஏற்படும்.
உடல் உறுப்புக்களை பாதிக்கச் செய்யும்.
உடலிலிருக்கும் செல்களை அழிக்கும்.
ஆண்களுக்கு ஆண்மைக் குறைபாட்டை ஏற்படுத்தும்.
நீண்ட நேரம் பயன்படுத்தலாமா?
தொலைபேசியை அதிக நேரம் பயன்படுத்தினால் மன அழுத்தம், மலச்சிக்கல், ஆண்மைக் குறைபாடு என்பன ஏற்படுவதாக கூறப்படுகிறது.