செல்போனை இப்படி வைத்து பயன்படுத்துறீங்களா? துரத்தும் புதிய டிஜிட்டல் நோய்
நாம் செல்போனை எவ்வாறு பிடித்து பயன்படுத்துகின்றோம் என்பது கூட தற்போது பிரச்சனையாக உருவாகியுள்ளது. இதனை Text Neck Syndrome என்று கூறப்படுகின்றது.
செல்போன் பயன்பாடு
இன்றைய காலத்தில் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போனிற்கு அடிமையாகியுள்ளனர். இதனால் பல பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
சிலர் கம்யூட்டரில் தொடர்ந்து வேலை செய்வதால் கண் பிரச்சனை ஏற்படுகின்றது. ஆனால் தற்போது பொழுதுபோக்கு, விளையாட்டு இவற்றிற்கு கூட செல்போனை பயன்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு செல்போன், கணினி பயன்படுத்துவதால் கண்ணாடி போட வேண்டிய நிலை ஏற்படுகின்றது. மேலும் அடிக்கடி தலைவலி, தூக்க பிரச்சனை, கண் பார்வை குறைவு, கவனச்சிதறல், மூளை சோர்வு பிரச்சனையும் ஏற்படுகின்றது.
அதுமட்டுமின்றி தற்போது நாம் செல்போனை எந்த நிலையில் பிடித்து பயன்படுத்துகின்றோம் என்பது கூட நோயாக மாறிவிட்டது. Text Neck Syndrome என்று தெரியவந்துள்ளது.
மார்பிற்கு கீழே வைத்து தலையை குனிந்து செல்போனை பயன்படுத்துவது கழுத்து பகுதியில் அதிக சுமையை ஏற்படுத்துகின்றது. இதனால் நரம்புகள், தசைகள், எலும்பு அமைப்பு ஆகியவற்றிலும் அதிக அழுத்தம் ஏற்படுகின்றது. இதுவே குறித்த சின்ட்ரோம் நோயை உருவாக்குகின்றது.

அறிகுறிகள் என்ன?
தலை குனியும் போது கழுத்தில் இறுக்கம், தோளில் தசை வலி, பிடிப்பு, தலைவலி, கழுத்து மற்றும் தோள்பகுதியில் நீங்காத வலி, நேராக நின்றாலும் கூன் விழுந்த நிலையில் காணப்படுவது, இயல்பாக குனிய முடியாமல் போவது போன்ற அறிகுறியாகும்.
நீண்ட நேரம் கணினி முன்பு வேலை செய்பவர்கள், மொபைல் போன் அதிகமாக பயன்படுத்துபவர்கள் அதிகமாக இந்த நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.

எப்படி தவிர்க்கலாம்?
கணினி திரையினை கண்களுக்கு நேராக வைத்துக் கொள்ளவும். அதாவது திரையின் உயிரம் கண்களின் உயரத்திற்கு இருக்கவும். கீபோராடு பயன்படுத்தும் தோள்பட்டையை தூக்காமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
இருக்கையின் உயரத்தினை சரி செய்யவும். ஏனெனில் உடல் சுமையில்லாமல் அமர்வது அவசியமாகும்.
செல்போன் அதிக நேரம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சரியான நேர இடைவெளியில் கழுத்து, தலையை நேராக நிமிர்த்தி சிறிய பயிற்சிகள் செய்யவும்.

கழுத்து வலி ஆரம்பித்ததும் மருத்துவரை அணுகி காரணத்தை கண்டறிந்து, பிசியோதெரபி போன்ற சிகிச்சை செய்யலாம். அதிகமான வலி இல்லாத நபர்கள், மருத்துவர்களின் ஆலோசையில் Chin Tuck, Neck Flexion போன்ற பயிற்சியினை மேற்கொள்ளலாம்.
இன்றைய காலத்தில் குழந்தைகள் பெரியவர்கள் செல்போன் இல்லாமல் இருக்க முடியாத காலமாக இருந்தாலும், அதனை சரியான முறையில் பயன்படுத்துவது மிகவும் முக்கியமாகும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |