உலகிலேயே ஒரு லிட்டர் பெட்ரோல் விலை வெறும் 2 ரூபாய்க்கு விற்கும் நாடு - எங்கு தெரியுமா?
இந்தியாவில் பெட்ரோல் விலை வரலாறு காணாத விதமாக உயர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் தமிழகத்தில் பெட்ரோல் விலை உயர்ந்த நிலையில், ஈரோட்டில் அதிகபட்சமாக 109 ரூபாய் வரை சென்றுள்ளது.
சென்னையில் 108 ரூபாய்க்கும், விழுப்புரத்தில் 110ரூபாய்க்கும் விற்க்கப்படுகிறது.
கோடைக்காலத்தில் உடலில் வீசும் துர்நாற்றத்தை போக்க வேண்டுமா? சூப்பர் டிப்ஸ்
2 ரூபாய்க்கு விற்கப்படும் பெட்ரோல்
இந்நிலையில், உலகிலேயே மிகக் குறைந்த அளவாக வெனிசுலாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 2 ரூபாய்க்கும் குறைவாகவே விற்கப்படுகிறது.
அந்த வகையில், வெனிசுலா, ஈரான், லிபியாவில் தண்ணீரை விட பெட்ரோல், டீசல் விலை குறைவாகவே இருக்கிறது.

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் பெட்ரோல் கிடைக்கும் நாடாக லத்தீன் அமெரிக்க நாடான வெனிசுலா உள்ளது.
இந்த நாட்டில் பெட்ரோல் விலை இந்திய ரூபாயில் 1. 93 காசு தான். அடுத்ததாக லிபியாவில் பெட்ரோல் விலை லிட்டர் 2.48 ரூபாய்க்கும், ஈரானில் பெட்ரோல் விலை லிட்டர் 3.95 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது.
மலேசியா, ரஷ்யா, சவுதி அரேபியா உட்பட 23 நாடுகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 ரூபாய்க்கு குறைவாகவே உள்ளது.