கோடைக்காலத்தில் உடலில் வீசும் துர்நாற்றத்தை போக்க வேண்டுமா? சூப்பர் டிப்ஸ்
கோடைக்காலத்தில், உடலில் இருந்து வியர்வை வெளியேறுவது இயல்பான ஒன்று ஆனால் பலருக்கும் உடலில் துர்நாற்றம் ஏற்படுகிறது.
இதனால் பொது இடங்களில் தர்மசங்கடத்தை சந்திக்க நேரிடுகிறது. இந்த துர்நாற்றத்தின் மூல காரணம் என்ன, அதை எவ்வாறு அகற்றுவது என்பதை இந்த கட்டுரையில் காண்போம்.
எனவே பொதுவாக சருமத்தில் இருக்கும் பாக்டீரியாக்கள் வியர்வையுடன் தொடர்பு கொள்ளும்போது, உடலில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.
ஆனால் வியர்வைக்கும், துர்நாற்றத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லையென்றாலும் அவை பாக்டீரியாவுடன் கலந்து துர்நாற்றத்தை உருவாக்குகிறது.
வியர்வை தோலின் மேற்பரப்பில் இருக்கும் இரண்டு வியர்வை சுரப்பிகளில் இருந்து வருகிறது. உடல் துர்நாற்றத்திற்கான காரணம் மரபணுவாக இருக்கலாம், அதைத் தவிர்க்க தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம்.
பூண்டு
வெங்காயம்
ப்ரோக்கோலி
காலிஃபிளவர்
முட்டைக்கோஸ்
மாமிசம்
அதிக அளவில் மசாலா பொருட்கள் எடுத்துக்கொள்வது
மது
காஃபின்

நிரந்தரமாக துர்நாற்றத்தை போக்க..
உடல் துர்நாற்றத்தைப் போக்க ஆப்பிள் சைடர் வினிகரைப் பயன்படுத்தலாம்.
இதற்கு ஒரு சுத்தமான ஸ்ப்ரே பாட்டிலில் 1 கப் ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து சேமித்து வைக்கவும்.
இந்த ஆப்பிள் சைடர் வினிகர் கலவையை இரவில் சுத்தமான மற்றும் உலர்ந்த அக்குள்களில் தெளித்துவிட்டு தூங்கச் செல்லவும்.
மறுநாள் காலை வெதுவெதுப்பான நீரில் அக்குள்களை கழுவவும்.
எள் விதைகள் சாப்பிடுவதால் இதயநோய் அபாயம் குறைவு
கல் உப்பு
கல் உப்பை வைத்து வியர்வை நாற்றத்தை போக்க கல் உப்பை பயன்படுத்தலாம்.
இதற்கு தான், குளிக்கும் தண்ணீரில் கல் உப்பை முழுவதுமாக கரையும் வரை கலக்க வேண்டும்.
அதன் பிறகு இந்த தண்ணீரில் குளிக்கவும்.
உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கை வைத்து கோடையில் வியர்வையால் ஏற்படும் அக்குள் துர்நாற்றத்தைப் போக்க பயன்படுத்தலாம்.
உருளைக்கிழங்கை தோலுரித்து துண்டுகளாக வெட்டக்கொள்ளவும், இப்போது இந்த துண்டை அக்குளில் தேய்த்து சுமார் 30 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவ வேண்டும்.