பாம்பை ஆயுதமாக பயன்படுத்திய நபர்! பின்பு நடந்தது என்ன?
தெருவில் அரங்கேறிய சண்டை ஒன்றில் பாம்பை ஆயுதமாக பயன்படுத்திய நபரின் காணொளி வைரலாகி வருகின்றது.
சண்டைக்கு ஆயுதமாகிய பாம்பு
டொரோண்டோவில் குடியிருக்கும் 45 வயதான நபர் ஒருவர் பாம்பை ஆயுதமாக வைத்து தாக்குதல் நடத்தியுள்ளார். பொதுவாக தெருக்களில் சண்டை என்றால் கையில் கிடைக்கும் ஆயுதத்தினை வைத்து தாக்குதல் நடைபெறும்.
டுவிட்டரில் "டொரண்டோவில் ஒரு தெரு சண்டையின் போது ஒரு நபர் தனது வளர்ப்பு பாம்பை ஆயுதமாக பயன்படுத்துகிறார்" என தலைப்பில் காணொளி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த காணொளியில் நபர் ஒருவர் மலைப்பாம்பு ஒன்றினை கையில் வைத்துக்கொண்டு மற்றொரு நபரை தாக்கியுள்ளார். இறுதியில் அந்த இடத்திற்கு காவல்துறையினர் வந்ததால், பாம்பை கீழே போட்ட நபர், சட்டென்று கீழே படுத்து பொலிசாரிடம் சரணடைந்துள்ளார்.
தற்போது குறித்த நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Dude uses his pet snake as a weapon during street fight in Toronto ? pic.twitter.com/T2lLKaLe4E
— Crazy Clips (@crazyclipsonly) May 13, 2023