உங்க பெயர் 'V' எழுத்தில் ஆரம்பிக்குதா? அப்போ பொருத்தமான தொழில் துறை இதுதான்
ஜேதிட மற்றும் எண்கணித சாஸ்திரங்களின் அடிப்படையில் ஒருவர் பெயரின் முதல் எழுத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.
அந்த வகையில் ‘V’ என்ற எழுத்தில் பெயர்ஆரம்பிப்பவர்களின் விசேட குணங்கள் தொடர்பிலும் இவர்களுக்கு வெற்றியை கொடுக்க கூடிய தொழில் துறைகள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
பொதுவாகவே V என்ற எழுத்தில் பெயர் ஆரம்பிக்கும் நபர்கள் தனித்துவமான ஆளுமை பண்புகளை கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் இயல்பிலேயே வசீகர தோற்றமுடையவர்களாகவும் தன்னம்பிக்கை நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். எந்த வேலையிலும் ஆபத்துக்கள் குறித்து அதிகமாக கவலைப்படாதவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் எந்த விடயத்திலும் பயம் இல்லாதவர்களாகவும் இயல்பாகவே புத்திகூர்மை அதிகம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.
அவைருடனும் அன்பாக பழகும் குணமுடையவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் இருப்பார்கள் உறவுகள் மீது அதிக அக்கறை கொண்ட இவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்களாகவும் இருப்பார்கள்.
பலவீனம்
இவர்கள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதனால் பல்வேறு சந்தர்ப்பங்களில் நன்மை தீமை குறித்து சிந்திக்காமல் தான் நினைத்தது சரி என்ற முடிவுக்கு வந்துவிடுவார்கள்.
இந்த பிடிவாத குணத்தால் இவர்கள் மற்றவர்களின் பார்வையில் திமிர் பிடித்தவர்களாக மாறிவிடும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்.
தொழில் துறை
இந்த எழுத்தில் பெயர் ஆரம்பிப்பவர்கள் பெரும்பாலும் இசை, எழுத்து அல்லது ஓவியம் போன்ற கலைகளில் தொழில் செய்தால் எளிமையாக வெற்றியடைவார்கள்.
இவர்களிடம் சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பரம் செய்வது அல்லது மக்களுடன் கதைத்து செய்யக்கூடிய தொழிலில் ஈடுபட்டால் வெற்றி இயல்பானதாகிவிடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |