ரகசியங்களை புட்டு புட்டு வைக்கும் ஆள்காட்டி விரல்.. நீங்க எந்த டைப்-ன்னு சொல்லுங்க
பொதுவாக ஒருவரின் குணயியல்புகளை அவர்களின் உடல் உறுப்புகளின் வடிவமைத்து வைத்து கண்டுபிடிக்கலாம்.
உதாரணமாக ஒருவரின் கால் விரல்களின் அமைப்பை வைத்து அவர்கள் அவர்களின் துணைக்கு அடங்கு போவார்களா? இல்லையா? என்பதை எமது முன்னோர்கள் கூறுவார்கள்.
மேலும் உடலுறுப்புக்களை கொண்டு அவர்களின் ஆளுமைகளை தெரிந்து கொள்வது ஒரு சுவாரஸ்யமான விடயம் என்பதால் பலரும் இதன் மீது ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அந்த வகையில், ஒருவரின் விரல்களின் அமைப்பை அடிப்படையாக கொண்டு அவர்கள் எப்படியானவர்கள் என்று எப்படி கண்டறியலாம் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
ஆள்காட்டி விரல் சொல்லும் ரகசியம்

1. கூர்மையான ஆள்காட்டி விரல்
ஒருவருக்கு கூர்மையான ஆள்காட்டி விரல் இருந்தால் அவர் நேர்மையானவராக பார்க்கப்படுகிறார். இவர்கள் கற்பனை திறன் அதிகம் கொண்டவர்களாக இருப்பதால் புதிய புதிய யோசனை கூறுவீர்கள். வழக்கத்திற்கு மாறாக புதிய அனுபவங்களை கண்டு மகிழ்ச்சயடைவீர்கள். தனித்துவமான கண்ணோட்டம் கொண்ட இவர்களிடம் மற்றவர்களை ஊக்குவிக்கும் திறன் இருக்கும்.
2. நேரான ஆள்காட்டி விரல்
நம்மிள் சிலரின் ஆள்காட்டி விரல் பார்ப்பதற்கு நேரானதாக இருக்கும். அப்படியானவர்கள் நம்பிக்கையான நபராக இருப்பார்கள். இதனால் குடும்பத்தில் உள்ளவர்கள், நண்பர்கள் ஆலோசனை கேட்பதற்காக அதிகமாக இவர்களிடம் வருவார்கள். எதையும் தைரியமாக செய்யும் இவர்களிடம் ஒழுக்கம் இருக்கும். உங்களுடைய துணைக்கு இப்படியான வடிவில் ஆள்காட்டி விரல் இருந்தால் நீங்கள் பாக்கியசாலிகளாக இருப்பீர்கள்.
3. வளைந்து நெலிந்த ஆள்காட்டி விரல்
பரம்பரை மற்றும் நோய் நிலைமைகள் காரணமாக சிலருக்கு கை விரல்கள் வளைந்து இருக்கும். அப்படியான ஆள்காட்டி விரல் கொண்டிருப்பவர்கள் சவால்களுக்கு அதிகமாக முகங்கொடுப்பார்கள். கடின உழைப்பாளிகளாக இருந்து, வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழியை தேடிக் கொண்டிருப்பார்கள். மற்றவர்கள் போன்று நேரத்தை வீண் செலவு செய்யும் பழக்கம் இவர்களுக்கு இருக்காது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |