அனிருத், காவ்யா மாறன் ஜோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு?
Anirudh, Kaviya Maran Net Worth: இசைமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமணம் நேற்று க்ரீஸ் நாட்டில் நடைபெற்ற நிலையில், இவர்களின் சொத்து மதிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
அனிருத், காவ்யா மாறன்
இசையமைப்பாளர் அனிருத், காவ்யா மாறன் இருவரும் காதலித்து வந்த நிலையில், பெற்றோர்களின் சம்மதத்துடன் நேற்று க்ரீஸ் நாட்டில் பிரம்மாண்டமாக திருமணம் செய்துள்ளனர்.
க்ரீஸ் நாட்டில் நடைபெற்ற இந்த திருமணத்திற்கு முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி சென்றனர். பின்பு அனிருத்தின் நெருங்கிய சொந்தமாக நடிகர் ரஜினிகாந்த்தும் தனது குடும்பத்துடன் சென்றுள்ளார்.

இவர்களின் திருமணம் க்ரீஸ் நாட்டில் தனி தீவு ஒன்றில் நடைபெற்றுள்ளதாம். இந்நிலையில் காவ்யா மாறனும் மிகப்பெரிய பணக்காரர் என்பதால் இவர்கள் இருவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அனிருத் காவ்யா சொத்து மதிப்பு
அனிருத் சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு அவரது குடும்பம் நடுத்தர குடும்பமாக இருந்துள்ளது. ஆனால் காவ்யா மாறன் குடும்பம் ஆரம்பத்திலேயே கோடீஸ்வரராகவே இருக்கின்றார்.
அனிருத் தற்போது ஒரு படத்திற்கு 10 கோடி சம்பளமாக பெறும் நிலையில் அவரது சொத்து 100 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கலாநிதி மாறனுக்கு 23 ஆயிரம் கோடி சொத்து இருப்பதாக கணிக்கப்படும் நிலையில், காவ்யா மாறன் தந்தையின் தொழிலையும் கவனித்து வருகின்றார். மேலும் ஐபிஎல்லில் ஹைதராபாத் அணியின் உரிமையாளராகவும் இருக்கின்றார்.

ஆதலால் தற்போது இவரிடம் 500 கோடி சொத்து இருப்பதாகவும், அப்பாவின் சொத்துடன் சேர்த்தால் கிட்டத்தட்ட 24 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்து இருக்கும் என்று கூறப்படுகின்றது.
அதுமட்டுமின்றி அனிருத் தனது இசை பயணத்தை மட்டுமின்றி காவ்யாவின் தொழில் வளர்ச்சியிலும் அவரை இனி காணலாம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |