போம்பேறிகளாகவே பிறப்பெடுத்த 3 ராசிகள்... உங்க ராசியும் இதல இருக்கா?
பொதுவாக ஒருவரின் பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது, அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, தொழில், கல்வி, தோற்றம், விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களிலும் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
அந்தவகையில், குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயற்கைளாகவே சற்று சோம்பேறி தனம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

அப்படி வாழ்வில் கடின உழைப்பை விரும்பாமல் எப்போதும் சொகுசாகவே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கும் சோம்பேறிகள் எந்தெந்த ராசிகளில் பிறந்தவர்களாக இருப்பார்கள் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் சுக்கிரனால் ஆளப்படுவதால் இயல்பாகவே ஆடம்பரத்தையும், சொகுசு வாழ்க்கைகையும் அதிகம் விரும்புகின்றார்கள்.
இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் சிறந்த விஷயங்களை மாத்திரமே அனுபவிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருபார்கள்.
அதற்காக இவர்கள் உழைக்கவே மாட்டார்கள் என்று அர்த்தம் கிடையாது. மற்றவர்கள் கஷ்டப்பட்டு செய்யும் விடயத்தை இவர்கள் எளிமையாக செய்யும் கலையை அறிந்துவைத்திருப்பார்கள்.
இவர்கள் ஓய்வெடுக்க முடிவு செய்தவுடன், எதுவும் அவர்களை நகர்த்த முடியாது. அந்தளவுக்கு தங்களின் மகிழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
மீனம்

மீன ராசிக்காரர்கள் கனவுகள் மற்றும் கற்பனை உலகில் அதிகமாக நேரம் செலவழிக்க விரும்புவதால், எப்போதும், ஓய்வெடுப்பதை உறுதிப்படுத்திக்கொள்வார்கள்.
தூக்கம் என்பது அவர்களின் மனகிளர்ச்சிகளை சற்று அடக்கி ஆறுதல் கொடுப்பதால், இவர்கள் ஓய்வில் இருப்பதை அதிகம் விரும்புகின்றார்கள். இவர்கள் எந்த வேலையில் ஈடுப்பட்டாலும் சிறிது ஓய்வில் இருப்பது இவர்களை அதிகம் மகிழ்ச்சிப்பபடுத்தும்.
இவர்கள் எளிதில் சோர்வடைந்துவிடும் உடல் அமைப்பு கொண்டவர்களாகவும் சோம்பேறி தனத்தை கட்டுக்குள் வைக்க முடியாதவர்களாகவும் இருப்பார்கள்.
துலாம்

துலாம் ராசியில் பிறந்தவர்கள் எப்போதும் உட்சாகமாக இருப்பார்கள் .ஆனால் வாழ்க்கை சமநிலையற்றதாக உணரும்போது, அவர்கள் எளிதில் சோம்பலில் மூழ்கிவிடுகின்றார்கள்.
சுக்கிரனால் ஆளப்படும் துலாம், இன்பம், நல்லிணக்கம் மற்றும் அழகை விரும்புகிறது. நீண்ட நடைப்பயணத்திற்கும் அழகான அறையில் ஒரு தூக்கத்திற்கும் இடையில் தேர்வு வழங்கப்பட்டால், அவர்கள் எப்போதும் ஒரு தூக்கத்தைத் தேர்ந்தெடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்கள் தேவையற்ற மன அழுத்தத்தை விரும்புவதில்லை, மேலும் தங்கள் சொந்த வேகத்தில் நகர விரும்புகிறார்கள்.அதனால் பதற்றமாக வாழ்க்கையில் இருப்பதை விட சோம்பல் எவ்வளவோ மேல் என்ற எண்ணம் இவர்களிடம் அதிகமாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |