உங்க பிறந்த கிழமையை வைத்தே குணாதியத்தை எப்படி தெரிஞ்சிக்கலாம்?
பிறந்த கிழமையைக் கொண்டு ஒருவரின் குணாதிசயங்களை நாம் தெரிந்து கொள்ள முடியும். இதனை இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
பிறந்தகிழமையும், குணாதிசயமும்
ஞாயிற்றுக்கிழமைகளில் பிறந்தவர்கள் புத்திசாலியாக இருப்பதுடன், மிகவும் கோபம் கொண்டவர்களாகவும், பயணம் செய்ய மிகவும் விரும்புகிறவர்களாகவும் இருப்பார்கள். அதிக நேரத்தினை பயணத்திலேயே செலவிடுவார்கள். சூர்ய கிரகத்தின் தாக்கம் இவர்களுக்கு இருக்கும்.
திங்கட்கிழமைகளில் பிறந்தவர்கள் மிகவும் புத்திசாலியாகவும், அமைதியான இயல்புடையவர்களாகவும் இருப்பார்கள். இன்பம், துன்பம் எதிலும் சமமாக இருக்கும் இவர்கள், பண பலத்தின் அடிப்படையில் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள். சமூகத்தின் மதிப்பையும், மரியாதையையும் பெறுவார்கள்.
செவ்வாய் கிழமைகளில் பிறந்த நபர்களின் அதிபதி செவ்வாய் ஆகும். இவர்களின் இயல்பு மிகவும் ஆற்றல்மிக்கதுடன், தைரியமான உறுதியான மனநிலையை உடையவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்கள் சொன்ன வார்த்தைகளை விட்டு விலகாமல் உறுதியாகவே இருப்பார்கள்.
இந்த 3 கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் யாரையும் திருமணம் செய்யாதீங்க.. நிராசையாக போய்விடும்- சாணக்கியரின் அறிவுரை
புதன் கிழமையில் பிறந்தவர்கள் இனிமையான வார்த்தைகளை பேசுபவர்களாகவும், மிகவும் அறிவாளிகளாகவும் இருப்பதுடன், எழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். தங்களது சொந்த காலில் நின்று சாதனை செய்ய விரும்பும் இவர்களுக்கு பணத்திற்கு பஞ்சமே இருக்காதாம்.
வியாழக் கிழமைகளில் பிறந்தவர்கள் திறமையானவர்களாகவும், செல்வந்தர்களாகவும், அபரிமிதமான அறிவுத்திறன் கொண்டவர்கள் ஆவர். மேலும் சிறந்த ஆலோசகராகவும், புதிய விடயங்களை கற்றுக் கொள்ளும் ஆர்வமும் அதிகமாக இவர்களிடம் அதிகமாகவே இருக்கும்.
வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் மிகவும் அழகானவர்களாகவும், திறமையானவர்களாகவும், எந்தவொரு விடயத்தையும் பகுத்தறிந்து ஆராய்வதில் வல்லவர்களாகவும் இருப்பார்கள். ஒழுக்கத்தில் மேம்பட்ட இவர்களின் அறிவுத்திறன் மிகவும் கூர்மையானது.
சனிக்கிழமை பிறந்தவர்களுக்கு சனி கிரகத்தின் தாக்கம் இருப்பதுடன், தங்கள் வாழ்க்கையை சொந்த வழியில் வாழ விரும்புவார்கள். சில தருணங்களில் சற்று கடுமையாகவும் இருப்பார்கள். துக்கங்களை எளிதில் தாங்கிக் கொள்வார்களாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |