மனைவி சம்மதத்துடன் திருநங்கையை திருமணம் செய்த நபர் - வைரலாகும் புகைப்படம்
ஒரிசாவில் மனைவி சம்மதத்துடன் கணவன் திருநங்கையை திருமணம் செய்த சம்பவம் ஆச்சரியத்தை வரவழைத்துள்ளது.
திருநங்கையுடன் காதல்
புவனேஸ்வர், ஒரிசா மாநிலம், கலஹந்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பஹிர் (32). இவருக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவியும், 2 வயதில் குழந்தையும் உள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டு சங்கீதா என்ற திருநங்கையுடன் பஹிருக்கு நட்பு ஏற்பட்டது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. பஹிர் தன் காதலை மனைவியிடம் சொல்லாமல் ரகசியமாகவே வைத்து வந்துள்ளார். ஆனால், அவரது மனைவி எப்படியோ பஹிரின் காதலை கண்டுபிடித்தார்.

மனைவி சம்மதத்துடன் நடந்த திருமணம்
இந்த விவகாரம் குறித்து மனைவி, பஹிருடன் அமர்ந்து பேசினார். அப்போது, தன்னுடைய காதலை பஹிர் மனைவியிடம் சொல்ல, மனைவி அந்த திருநங்கையை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து, இருவருக்கும் திருநங்கைகள் புடைசூழ கோயில் ஒன்றில் மனைவி முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
இது குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

