மாதவிடாய் வலியை போக்க வீட்டு வைத்தியம் இதோ... இனி கவலையே வேண்டாம்
பெண்கள் மாதந்தோறும் மாதவிடாய் வலியால் அவதிப்படுபவதுடன், இதற்காக ஏகப்பட்ட மாத்திரைகள், மருந்துகளை எடுப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள்.
இந்த காலக்கட்டத்தில் அதிகமான வலி நிவாரணிகளை பயன்படுத்தாமல் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து வலியை குறைக்கவும் முடியும்.
மாதவிடாய் கால வலிக்கான காரணங்கள்:
மாதவிடாய் காலத்தில் பெண்களின் கருப்பையில் ப்ரோஸ்டாக்லாண்டின் என்ற ஹார்மோன் வெளியாகும் போது மாதவிடாய் பிடிப்பை ஏற்படுத்துகின்றது. இதனாலேயே பலருக்கும் அதிகமான வலி ஏற்படுகின்றது.
மாதவிடாய் காலங்களில், கருப்பையில் இரத்தம் இல்லாததால் தசைகள் சுருங்கும். இதனால் வயிற்றில் வலி மற்றும் பிடிப்புகள் ஏற்படும். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை எவ்வாறு குறைக்கலாம் என்பதை பார்க்கலாம்.
மாதவிடாய் வலியை குறைக்கும் வீட்டு வைத்தியங்கள்
இந்த காலக்கட்டத்தில் ரத்த இழப்பினால் ஏற்படும் பலவீனத்தை போக்குவதற்கு வெல்லம் பயனுள்ளதாகவே இருக்கும். ஏனெனில் வெல்லத்தில் சோடியம் மற்றும் பொட்டாசியம் அதிகம் காணப்படுவதால், இவை அழற்சி எதிர்ப்பு, மற்றும் ஆண்டிஸ்பாஸ்மோடிக் பண்புகளையும் கொண்டுள்ள நிலையில், மாதவிடாய் பிடிப்பு, வயிறு வலி இவற்றினை கட்டுப்படுத்தும்.
ஹீட்டிங் பேட்களை பயன்படுத்துவதில் மாதவிடாய் காலங்களில் வயிற்றுப் பிடிப்பு குறைகின்றது. மேலும் இவை தசை சுருக்கத்தினை தளர்த்தவும், வலியிலிருந்து உடனடி நிவாரணம் கொடுக்கின்றது. ஹீட்டிங் பேட் இல்லாதவர்கள், சூடான தண்ணீரில் குளிப்பது, வெந்நீரில் டவலை நனைத்து வயிற்றில் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம்.
இந்த மாதவிடாய் காலக்கட்டத்தில் சூடான எண்ணெய்யை வயிற்றில் தடவி மசாஜ் செய்தால் வலியை குறைக்கும்.
மாதவிடாய் காலத்தில் பாதாம், கருப்பட்டி, கீரை, தயிர் மற்றும் வேர்க்கடலை வெண்ணெய் போன்ற மெக்னீசியம் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட்டால் வயிற்று பிடிப்பினால் ஏற்படும் வலி சரியாகும்
மேலும் மூலிகை பானங்களை பருகலாம். அதாவது சோம்பு, இலவங்கப்பட்டை மற்றும் இஞ்சி சேர்த்து பானம் தயாரித்து குடித்தால் மாதவிடாய் வலியை முற்றிலும் தவிர்க்கலாம்.