ஒரு விஷயத்தை அடிக்கடி செய்பவரா நீங்கள்? அப்போ இந்த நோய் கண்டிப்பாக உள்ளது
நாம் நமது வாழ்வில் அடிக்கடி செய்யும் ஒரு செயலே நாளடைவில் அது பெரும் பிரச்சனையாக மாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.
OCD
OCD என்பது ஒரு நோய் என கூறுவாம். இது மனிதர்களுக்கு வருவதற்கான காரணம் சிலவையும் உள்ளன. செரோட்டோனின், டோப்பமைன் மற்றும் குளூட்டாமேட் போன்ற நரம்பு கடத்திகளில் ஏற்படும் சமநிலையின்மை காரணமாக இந்த கோளாறு ஏற்படலாம்.
இதை தவிர சிறுவயதில் ஏற்பட்ட வாழ்க்கை அனுபவங்கள், ட்ராமா, மன அழுத்தம் மற்றும் கற்றுக்கொண்ட சில நடத்தைகள் சுற்றுச்சூழல் காரணிகளும் OCD வருவதற்கு ஊறுதுணையாக உள்ளது.
இது வாழ்கையில் பல பிரச்சனைகளை கொண்டு வரும். இது தனிநபரின் வாழ்க்கை, வேலை, கல்வி, சமூகம் சார்ந்த செயல்பாடுகள் போன்றவற்றில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
OCD பிரச்சனை இருப்பவர்கள் முடிவு எடுப்பதிலும் கவனம் செலுத்துவதிலும் சிக்கல்களை அனுபவிப்பார்கள். மனச்சோர்வு, பதட்ட கோளாறுகள், போதைப் பொருளுக்கு அடிமை மற்றும் தற்கொலை போன்ற எண்ணங்களை தூண்டுகிறது.
இதற்க குறிப்பிட்ட சில சிகிச்சைகளும் உள்ளன. OCDயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள் கட்டாயமாக மனநல மருத்துவரை அணுகி தனிப்பட்ட சிகிச்சை திட்டத்தை பெற்று வருவது அவசியம்.