ரயில் படியில் பயணித்த நபர்கள்... நாய் கற்றுக்கொடுத்த பாடம்! வைரல் காணொளி
நாய் ஒன்று சென்று கொண்டிருக்கும் ரயிலின் படியில் பயணம் செய்யும் நபர்களை எச்சரித்து உள்ளே அனுப்பும் காட்சி வைரலாகி வருகின்றது.
பொதுவாக வீடுகளில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய் முதலாளிகளுக்கு நன்றியுள்ள ஜீவனாகவும் இருக்கின்றது. குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக இருப்பதுடன், வீட்டில் குழந்தைகளையும் பத்திரமாக பாதுகாக்கும் காட்சிகளை அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.
இன்றைய காலத்தில் உறவினர்கள் கூட நம்மை கை கழுவிவிட்டு சென்றாலும், இம்மாதிரியான செல்லப்பிராணிகளை மக்கள் தங்கள் சொந்த பிள்ளைகள் போன்று வளர்த்து பாசம் காட்டுகின்றனர். அதற்கு பல மடங்கு தன்னால் முடிந்த உதவியையும் செய்கின்றது.
இங்கு சென்று கொண்டிருக்கும் ரயிலில் வாசலில் அமர்ந்து பயணிக்கும் பயணிகளை நாய் ஒன்று விரட்டி விரட்டி உள்ளே அனுப்பியுள்ளது. இக்காட்சி தற்போது வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |