AC-யிலிருந்து வெளியேறிய தண்ணீர்... தீர்த்தமென குடித்த மக்கள்! அர்ச்சகர் கொடுத்த அதிர்ச்சி
ஏசியிலிருந்து வெளியேறிய தண்ணீரை மக்கள் தீர்த்தமென்று குடித்துள்ள சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளது.
இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள மதுரா நகரில், பிரசித்து பெற்ற பங்கே பிஹாரி கோவில் ஒன்று உள்ளது. இந்த கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, யானை தலை சிற்பத்தின் வாய் வழியே வழிந்த தண்ணீரை 'தீர்த்தமாக' பிடித்து அருந்தி வந்தனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. குறித்த காணொளியில் யானை முகம் போன்ற சிலையிலிருந்து நீர் சொட்டு சொட்டாக கீழே விழுகின்றது.
இதனை மக்கள் கையிலும், கோப்பையிலும் பிடித்து குடித்து, கும்பிட்டும் செல்கின்றனர். தற்போது அந்த யானை சிற்பத்தில் வாய் வழியாக வந்த தண்ணீர் தீர்த்தமல்ல என்றும், அது ஏசி-யிலிருந்து வழியும் நீர் என்றும் அர்ச்சகர் ஒருவர் கூறியுள்ளார்.
அர்ச்சகர் கூறிய பின்பு குறித்த மக்களில் சிலர் சிரித்துக் கொண்டே சென்றுள்ளனர். ஆனாலும் பின்னே வந்த நபர்கள், அதனை தீர்த்தம் என்று நினைத்து பக்தியுடன் குடித்துவிட்டுத் தான் சென்றுள்னர்.
People are drinking AC water thinking it is 'Charanamrit' from the feet of God pic.twitter.com/kRhDLeZD3O
— non aesthetic things (@PicturesFoIder) November 5, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |