இந்த தேதியில் பிறந்தவர்கள் காதலில் பலத்த அடிவாங்குவார்களாம்.. எண் கணிதம் என்ன கூறுகிறது தெரியுமா?
Horoscope
Astrology
By DHUSHI
பொதுவாக ஒருவர் பிறந்த திகதியை வைத்து அவரின் காதல், தொழில், குணங்கள், வாழ்க்கைமுறை உள்ளிட்ட விடயங்களை அறிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு பெயர் மற்றும் எண்ணை அடிப்படையாக வைத்தே ஒரு நபரின் ராசி கணிக்கப்படுகின்றது.
இவ்வாறு கணிக்கப்படும் எண் கணிதத்தில் ரேடிக்ஸ் எண்கள் உள்ளன. இந்த ரேடிக்ஸ் ஏதோ ஒரு கிரகத்துடன் தொடர்புடையதாக இருக்கும்.
அதே நேரத்தில், உங்கள் பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகியவற்றைக் கூட்டினால், வரும் எண் ‘’விதி எண்'' என்று அழைக்கப்படுகிறது.
உதாரணமாக 5, 14, 23ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஐந்து என்ற ரேடிக்ஸ் எண் இருக்கும்.
அந்த வகையில் எண்கணிதப்படி, காதலில் ஏமாற்றப்பட்டப்படும் எண்கள் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
காதலில் அடிவாங்கும் நபர்கள்
1. 5 ஆம் திகதி பிறந்தவர்கள்
- 12 மாதங்களில் 5 ஆம் திகதி பிறந்தவர்கள் மூல எண்(ரேடிக்ஸ் எண்) 5 -ஐ கொண்டிருப்பார்கள். இந்த ரேடிக்ஸ் எண்ணைக் கொண்டவர்கள் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள்.
- எந்த துறையில் இருந்தாலும் வெற்றிப் பெறுவார்கள்.
- இவர்களுக்கு சமூகத்தில் நல்ல மரியாதை கிடைக்கும். ஆனால் காதல் விஷயத்தில் அதிர்ஷ்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். சில சமயங்களில் ஆதரவு கிடைக்காமல் கூட போகலாம்.
- காதல் வாழ்க்கையில் மிகவும் நடைமுறையானவர்களாக நடந்து கொள்வார்கள். இதன் காரணமாக காதலில் தோல்வியடைவார்கள்.
2. 14 ஆம் திகதி பிறந்தவர்கள்
- 14 ஆம் திகதி பிறந்தவர்கள் 5 ரேடிக்ஸ் எண் கொண்டவர்களாக இருப்பார்கள்.
- இந்த எண் கொண்டவர்கள் தொழில், வியாபாரத்தில் வெற்றி பெறுவார்களாக இருப்பார்கள்.
- காதல் வாழ்க்கையில் நிம்மதியே இருக்காது.
- பல முறை முயற்சி செய்தாலும் உறவுகளில் அதிகமான குழப்பம் இருக்கும்.
- துணையை நல்ல வழியில் வழி நடத்த கஷ்டப்படுவார்கள்.
- நீண்ட காலத்திற்குப் பிறகு உண்மையான அன்பை வெளிப்படுத்துவார்கள்.
3. 23 ஆம் திகதி பிறந்தவர்கள்
- 12 மாதங்களில் 23ஆம் தேதி பிறந்தவர்கள் கவர்ச்சிகரமான ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள்.
- நல்ல வாழ்க்கைத்துணைக்காக நம்பிக்கையுடன் காத்திருப்பார்கள்.
- பல நேரங்களில் அவர்களுக்கு சரியானதொரு துணையை தெரிவு செய்ய முடியாமல் தடுமாறுவார்கள்.
- காதலைத் தேடுவதில் உண்மையான அன்பையும் இழக்க நேரிடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US