இந்த திகதிகளில் பிறந்தவர்கள் ஆடம்பர வாழ்க்கையை அனுபவிப்பார்களாம்... உங்க திகதி என்ன?
எண் கணித சாஸ்திரத்தின் பிரகாரம் ஒவ்வொரு எண்ணும் ஒரு நபரின் ஆளுமை மற்றும் எதிர்கால வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்தும் என்று தொன்று தொட்டு நம்பப்பட்டு வருகின்றது.
இது பண்டைய காலத்தில் இருந்தே ஒருவரின் எதிர்காலத்தை துல்லியமாக கணித்து கூறுவதற்கு எண்கணித சாஸ்திரத்தை பின்பற்றி வருகின்றனர்.
ஒருவரின் பிறப்பு எண் அவர்களின் எதிர்கால வாழ்கையுடனும் நிதி நிலையிலும் நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில திகதிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கை முழுவதும் பணத்துக்கு எந்தவித கஷ்டமும் இல்லாது செல்வ செழிப்புடன் வாழ்வார்களாம். அவை எந்தெந்த திகதிகள் என இந்த பதிவில் பார்க்கலாம்.
22 ஆம் திகதி
12 மாதங்களில் எந்த மாதமாக இருந்தாலும், 22 ஆம் திகதிகளில் பிறந்தவர்கள் வாழ்க்கை முழுவதும் செழிப்பாக வாழ்வார்களாம்.
இவர்கள் வாழ்வில் ஒரு போதும் பணத்துக்கு போராட வேண்டிய நிலை ஏற்படுவது கிடையாது. இவர்கள் இயல்பாகவே பணத்தை ஈர்க்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
4 ஆம் திகதி
எந்த மாதமாக இருந்தாலும் 4ஆம் திகதிகளில் பிறந்தவர்கள் நிதி ரீதியாக மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்களாம்.
இவர்களுக்கு பிறப்பிலேயே நிதி முகாமைத்துவ அறிவு மற்றும் பணத்தை சேமிக்கும் ஆற்றல் அதிகமாக இருக்கும்.
இவர்களிடம் பணம் வந்துக்கொண்டே இருக்கும். இவர்கள் பணத்தை சரியான முறையில் முதலீடு செய்து இரட்டிப்பாக்கும் கலையை நன்றாக கற்றுதேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
13 ஆம் திகதி
13 ஆம் திகதிகளில் பிறந்தவர்களுக்கு நிதி விடயங்களில் சரியான புரிதலும், தெளிவான அறிவும் நிச்சயம் இருக்கும்.
இவர்கள் இயல்பாகவே பணத்தை சரியாக நிர்வகிப்பதில் தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு ஆடம்பர வாழ்க்கையின் மீது இருக்கும் அதீத மோகம் இவர்களை வாழ்ககை முழுவதும் செல்வ செழிப்புடன் வைத்திருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |