இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு திருமணம் என்றாலே அலர்ஜியாம்.! ஏன்னு தெரியுமா?
எண்கணித சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுவதன் அடிப்படையில் ஒருவருடை பிறப்பு தேதியானது இவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, திறமைகள் உட்பட அவர்களின் குணங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் என நம்ப்பப்படுகின்றது.
எல்லோரின் வாழ்க்கையிலும் காதலும் திருமணமும் முக்கியமானவை. ஆனால் சிலர் திருமணத்தில் ஆர்வம் காட்டாமல் சிங்கிளாகவே வாழ விரும்புவார்கள்.

நியூமராலஜி படி, பிறந்த தேதி ஒருவரின் குணநலன்களையும் உறவு தொடர்பான முடிவுகளையும் பாதிக்கலாம்.
குறிப்பாக சில தேதிகளில் பிறந்தவர்கள் உறவுகளை விட சுதந்திரத்திற்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், தனியாக வாழத் தேர்வு செய்வார்கள். அப்படிப்பட்ட தேதிகள் எவை என்பதை பார்க்கலாம்.
எண்: 1

எந்த மாதத்திலும் 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் 1-ன் கீழ் வருவார்கள். இவர்களிடம் இயல்பாகவே தலைமைத்துவ பண்புகள் அதிகமாக காணப்படும்.
சுதந்திரமாக வாழ வேண்டும் என்ற எண்ணம் வலுவாக இருக்கும். தங்களின் இலக்குகள், தொழில் முன்னேற்றம் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
உறவுகளில் எளிதில் சமரசம் செய்து கொள்வது இவர்களுக்கு சற்றுக் கடினமாக இருக்கும். அதனால், இவர்கள் பொதுவாக திருமணத்தை அவசரப்படுத்த மாட்டார்கள். நீண்ட காலம் தனித்து வாழ்வதையும் விரும்புவார்கள்.
எண்: 3

எந்த மாதத்திலும் 3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் 3-ன் கீழ் வருவார்கள். இவர்கள் படைப்பாற்றல் மிக்க சிந்தனையாளர்களாக இருப்பார்கள்.
ஆனால், உணர்வுகள் மற்றும் உறவுகள் தொடர்பான விஷயங்களில் தெளிவின்மை காணப்படலாம். காதலில் எளிதில் ஈர்க்கப்பட்டாலும், அதே வேகத்தில் ஆர்வத்தையும் இழக்கக்கூடியவர்கள்.
மற்றவர்களுடன் தொடர்ந்து நேரம் செலவிடுவதை விட, தனிமையில் இருப்பதையே அதிகம் விரும்புவார்கள்.
எண்: 5

எந்த மாதத்திலும் 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் 5-ன் கீழ் வருவார்கள். சுதந்திரத்தை மிகவும் மதிக்கும் குணம் இவர்களிடம் இருக்கும்.
கட்டுப்பாடுகள் மற்றும் கடுமையான விதிமுறைகள் இவர்களுக்குப் பெரிதாகப் பிடிக்காது. புதிய அனுபவங்கள், சாகசங்கள் மற்றும் பயணங்கள் இவர்களை அதிகம் கவரும்.
இந்த சுதந்திர மனப்பான்மையால், புதிய பொறுப்புகளை ஏற்கத் தயங்குவார்கள். அதனால், தனித்துவமான வாழ்க்கை முறையையே பெரும்பாலும் விரும்புவார்கள்.
எண்: 7

எந்த மாதத்திலும் 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் 7-ன் கீழ் வருவார்கள். இவர்கள் தங்களுடைய உணர்வுகளை மற்றவர்களுடன் எளிதில் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.
மேலும், யாரையும் எளிதில் நம்பும் குணமும் இவர்களிடம் இருக்காது. தங்களின் தனிப்பட்ட விஷயங்களையும் ரகசியங்களையும் மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள்.
மற்றவர்களிடம் எச்சரிக்கையுடன் பழகும் இந்த குணத்தால், பல நேரங்களில் நீண்ட காலம் தனியாகவே இருப்பதைத் தேர்வு செய்கிறார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |