வசீகரத்தால் மற்றவர்களை நொடியில் கவரும் தேதியில் பிறந்த பெண்கள்
சில தேதியில் பிறந்தவர்கள் இயற்கையான வசீகரத்தால் மற்றவர்களை நொடிப்பொழுதில் ஈர்ப்பார்கள் எனப்படுகின்றது.

எண்கணிதம்
எண் கணிதத்தில், 6 என்ற எண்ணைக் கொண்ட பெண்கள் வசீகரம் மற்றும் அழகின் தேவதைகளாகக் கருதப்படுகிறார்கள். எந்த மாதத்திலும் 6, 15, அல்லது 24 ஆம் தேதிகளில் பிறந்த பெண்களுக்கு 6 என்ற எண் இருக்கும்.
இத்தகைய பெண்கள் குறிப்பிடத்தக்க வசீகரத்தைக் கொண்டிருப்பதால், யாரையும் எளிதில் ஈர்க்கிறார்கள் எனப்படுகின்றது. இந்தப் பெண்கள் முதல் சந்திப்பிலேயே அனைவர் மனதிலும் இடம்பிடிக்ககூடியர் என்று கூறப்படுகின்றது.

இந்த பெண்களிடம் மற்றவர்களிடமிருந்து தனித்துக்காட்டும் சிறப்பு குணங்களைப் நிறைந்திருக்கும். மேலும் இவர்கள் சுக்கிர பகவானின் சிறப்பு ஆசீர்வாதங்களைப் பெற்றிருக்கிறார்கள் என எண்கணிதத்தில் கூறப்படுகின்றது.
ஜோதிடத்தில், சுக்கிரன் செல்வம், செழிப்பு, கலை மற்றும் அழகு ஆகியவற்றின் காரணியாகக் கருதப்படுகிறார். இதனால்தான் இந்த பெண்களும் ஒரு வசீகரத்தால் மக்களை கவர்கிறார்கள்.

6 எண் கொண்டவர்களின் சிறப்பு பண்புகள்
- இந்த எண்ணைக் கொண்ட பெண்கள் தங்கள் அன்புக்குரியவர்களை முதல் பார்வையிலேயே கவரக்கூடியவர்கள். இவர்களின் தகவல் தொடர்புத் திறன் மிகவும் சிறப்பாக இருப்பதால் இவர்களுககு நண்பர்கள் அதிகம்.
- இந்த எண்ணைக் கொண்ட பெண்கள் மிகவும் ஸ்டைலாக இருப்பார்கள். சுக்கிரனின் அருளால், அவர்கள் நன்றாக ஆடை அணிவதையும் தங்களைப் பராமரித்துக் கொள்வதையும் விரும்புகிறார்கள்.
- இந்த பெண்கள் அவர்கள் தங்களுக்குப் பிரியமானவர்களின் ஒவ்வொரு தேவையையும் சிறப்பாகக் கவனித்துக் கொள்வார்கள். யாரும் துன்பப்படுவதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. இதனால் எப்போதும் மற்றவர்களுக்கு உதவத் தயாராக இருப்பார்கள்.
- சுக்கிரனின் தாக்கத்தால், இந்த எண்ணின் கீழ் பிறந்த பெண்கள் மிகவும் படைப்பாற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். அவர்கள் வேலையை அணுகும் விதம் தனித்துவமானது.
- இந்த எண்ணைக் கொண்ட பெண்கள் பெரும்பாலும் நடிப்பு, நடனம், பாடுதல், ஓவியம் அல்லது ஆடை வடிவமைப்பு போன்ற துறைகளில் புகழையும் பணத்தையும் சம்பாதிக்கிறார்கள் எனப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).