ஆண்குறியில் ஏற்படும் நோய்களும் தடுக்கும் வழிமுறைகளும்... அலட்சியம் வேண்டாம்...!
இயற்கையாகவே ஆண்கள் உடலளவில் பலமானவர்களாக இருந்தாலும், பிறப்புறுப்பில் ஏற்படும் குறைப்பாடுகளை அவர்களால் தாங்கி கொள்ளவே முடியாது.
இந்த பிரச்சினையானது அவர்களை மட்டுமின்றி அவர்களின் தாம்பத்தியத்தையும் பாதிக்கிறது. பிறப்புறுப்பில் பிரச்சினை ஏற்பட்டால் ஒரு ஆணின் அன்றாட வாழ்க்கையிலிருந்து அவனின் மனநிலை வரை மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும்.
ப்ரியாப்சிம்
ப்ரியாப்சிம் என்பது ஆண்களுக்கு ஆணுறுப்பில் விறைப்பு ஏற்படும் நீண்ட நேரம் விறைப்பு தண்மை குறையாமலே இருக்கும். 4 மணிநேரம் விறைப்பில் இருக்கும் போது வலி அதிகமாக இருக்குமாம்.
இரத்த ஓட்டம் சீராக இருக்கும் போத்ய் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. இவை அனைத்து வயது ஆண்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு நோயாகும்.
வகைகள் என்ன?
இந்த நோயில் இரண்டு வகைகள் உள்ளது. குறைந்த ஓட்ட ப்ரியாப்சிம் மற்றும் உயர் ஓட்ட ப்ரியாப்சிம். குறைந்த ஓட்ட ப்ரியாப்சிம் என்பது ஆணுறுபின் விறைப்பு பகுதியில் பகுதியில் இரத்த ஓட்டத்தில் ஏற்படும் சிக்கலால் ஏற்படுவதாகும்.
இதனால் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால் இதனை குணப்படுத்த இயலாது.
சிகிச்சை
வீக்கத்தை குறைக்க ஐஸ்கட்டி உபயோகிப்பது சிறிதளவு குறைக்கலாம். மருத்துவர் ஊசி மூலமாக ஆணுறுப்பில் தேங்கியுள்ள இரத்தத்தை வெளியேற்றுவது ஒரு சிகிச்சை முறை.
பிமோஸிஸ்
பிமோஸிஸ் என்பது ஆணுறுப்பை சுற்றியுள்ள தோல் வெளியேற்றப்பட்டால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பாமல் இருப்பதாகும்.
இவை இது ஆண்களுக்கு சிறுவயதிலேயே ஏற்படக்கூடிய ஒன்றாகும்.
காரணம்
முக்கிய காரணமாக திசுக்களில் ஏற்படும் பிரச்சினையே தான். இதனால் ஆணுறுப்பை சுற்றியுள்ள சருமங்களின் நெகிழ்வுத்தன்மை குறையும். எனவே அதனை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர அதிக முயற்சி தேவைப்படும்.
அறிகுறிகள்
சிறுநீர் கழிக்கும் போது ஆணுறுப்பின் தோல் விரிவடையாமல் இருப்பதால் வலி ஏற்படக்கூடும். சில நேரத்தில் இரத்தம் கூட வரலாம்.
உறவில் ஈடுப்படும் போது அதிக வலி ஏற்படக்கூடும். ஆணுறுப்பை சுற்றி வெள்ளை நிறத்தில் ஒரு வட்டம் தோன்றும்.
சிகிச்சை முறை
ஆணுறுப்பில் ஏற்பட்டுள்ள வீக்கத்தை மருத்துவர் குறைப்பார். திரவங்கள் வெளியேற ஆணுறுப்பில் ஊசி மூலம் சிறிய துளைகள் இடப்படும்.
இதற்காக உள்ள சில க்ரீம்களை தினமும் அடிக்கடி ஆணுறுப்பில் தடவி மசாஜ் செய்வது அங்குள்ள சதைகளை நெகிழ்வு அடைய செய்யும்.
ஆண்குறி கோளாறு
ஆண்குறி கோளாறுகள் அசௌகரியம் மற்றும் வலியை ஏற்படுத்துவது மட்டுமில்லாமல், ஒரு நபரின் பாலியல் செயல்பாடுகளை பாதிக்கின்றன.
இதனால் கருவுறுதல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கின்றன.
பிரியாணி உடன் இந்த பொருட்களை சேர்த்து சாப்பிடுவது பெரும் ஆபத்தை ஏற்படுத்துமாம்! ஜாக்கிரதையாக இருங்க
நோயின் தாக்கம்
விறைப்புச் செயலிழப்பு.. இது மிகவும் பொதுவான ஒரு நிலை ஆகும். விறைப்பைத் தக்கவைக்கப்பதில் சிரமம் அல்லது இயலாமை.
பெரோனிஸ் நோய்
இந்த நோயில், ஆண்குறி உட்புற புறணியில் வடு திசுக்களால் ஆன கடினமான கட்டிகளை உருவாகிறது, இது விறைப்பின்போது ஒரு பக்கத்திற்கு ஆண்குறியை வளையச் செய்கிறது.
தடிப்புகள், அரிப்பு, தோல் நிறமிழப்பு மற்றும் ஆண்குறியின் புண்களுக்கு இந்த தோல் கோளாறுகள் வழிவகுக்கிறது. தடிப்புகள், அரிப்பு, தோல் நிறமிழப்பு மற்றும் ஆண்குறியின் புண்களுக்கு இந்த தோல் கோளாறுகள் வழிவகுக்கிறது.
நோய் தாக்க காரணம்
சில மருந்துகள், மது, காயங்கள், முதுகுத் தண்டு நிலைகள் ஆகியவை ப்ரியப்ரிசும் நோயின் காரணங்களாகும். முதுமைக்கு முற்றுப்புள்ளி வைக்காத ஃபிமோஸிஸ், விருத்தசேதனம் செய்யப்பட்ட ஆண்களில் பொதுவாக காணப்படுகிறது.
புகைப்பிடித்தல் மற்றும் ஹெச்.பி.வி ஆகியவை ஆண்குறி புற்றுநோயின் முக்கியமான காரணங்கள்.
ஆண்கள் அதிக இரசாயனம் கலந்த சோப்புகளையும், ஜெல் போன்ற பொருள்களையும் கொண்டு அந்தரங்க உறுப்பை சுத்தம் செய்வதால் அங்கிருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு தொற்று அதிகரிக்கிறது.
அந்தரங்க உறுப்பில் தொற்று உள்ள பெண்ணுடன் பாலியல் உறவு கொள்ளும் போதும் தொற்று எளிதில் பரவி விடுகிறது. எனவே பாதுகாப்பு இல்லாத முறையில் உடலுறவு கொள்வதை தவிர்க்க வேண்டும்.
கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கும் முறை
பொதுவாக ஆண்குறி மற்றும் விந்தகங்களைப் பரிசோதிப்பதன் மூலம் நோயறிதல் செய்யப்படுகிறது. ஒரு ஊசி மூலம் ஆண்குறியிலிருந்து இரத்தத்தை வெளியேற்றுவதன் மூலம் ப்ரியப்ரிசும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஃபிமோஸிஸ் நோய்க்கு பெரும்பாலும் அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. பெரோனிஸ் நோய், மிதமான நிலையில் இருந்தால், 15 மாதங்களுக்குள் எந்த சிகிசையும் இல்லாமல் தானாகவே குணமடைந்துவிடும்.
அடுத்து, ஆண்குறி புற்றுநோயானது அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் கீமோதெரபி ஆகியவற்றால் சிகிச்சையளிக்கப்படுகிறது.
ஆட்டிறைச்சி பிரியரா? அடிக்கடி சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
ஆண்குறியில் ஈஸ்ட் பூஞ்சை தொற்று
ஆண்குறியில் ஈஸ்ட் பூஞ்சை தொற்று உடலின் செரிமான உறுப்பு, வாய், தோல் மற்றும் பிறப்புறுப்பு உறுப்புகளில் வாழ்கிறது.
ஆண்களுக்கு இந்த தொற்று உண்டாகும் போது அவை பிறப்புறுப்பில் வரும் போது வேகமாக வளரும் தன்மை கொண்டது. இதை கெண்டிடையசிஸ் என்று அழைக்கப்படுகிறது.
மேலும், ஆண்கள் இந்த தொற்றுக்கு உள்ளாகும் போது ஆண்குறியில் வலி மிகுந்த கட்டியை உண்டாக்குகிறது.
ஆண் குறியில் அரிப்பு, சிவந்து போதல், வலிமிக்க கட்டி, உறுப்பில் இருந்து ஒருவித திரவம் வெளியேறுதல், சிறுநீர் கழிக்கும் போது ஒரு வித எரிச்சலையும் உண்டாக்குகிறது.
பாதுக்காப்பு முறைகள்
-
ஆண்குறியை சுத்தமாக வைத்திருத்தல்
- பிறப்புறுப்புகளை ஒரு வழக்கமான அடிப்படையில் பரிசோதித்தல்
- பல நபர்களுடன் உடலுறவில் ஈடுபடுவதைத் தவிர்த்தல்
- இறுக்கமான உள்ளாடைகளை அணியாமல் இருக்க வேண்டும்.
- தீவிர வெப்ப வெளிப்பாட்டிலிருந்து ஆண்குறியைப் பாதுகாத்தல்
- புகைப்பிடித்தலை நிறுத்துதல்
-
நீராவி குளியல், உடற்பயிற்சிகள் போன்றவையும் வலியை குறைக்கும் சிகிச்சையில் முக்கியத்துவம் பெறுகிறது.
