மனிதனின் முகத்தில் இனப்பெருக்கம் செய்யும் பூச்சிகள்... ஆச்சரியம் ஆனால் உண்மை..!
பொதுவாக கண்ணுக்கு தெரியாத பல உயிரினங்கள் உயிர் வாழ்வதை அறிந்திருப்போம். அவை நாம் தூங்கும் போது முகத்தில் இனப்பெருக்கம் செய்வதாக சொன்னால் நம்ப முடியுமா? ஆம், இதை கேட்கும் போது ஆச்சரியமாகத்தான் இருக்கும்.
இதனை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். பிரிட்டன் பெர்க்ஷயரில் உள்ள ரீடிங் பல்கலைக்கழகம் மற்றும் பிரிடன் வேல்ஸில் உள்ள பேங்கூர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து நடத்தி ஆய்வு ஒன்றில் மனித கண்ணுக்கு தெரியாத பூச்சிகள் வாழ்வதை கண்டறிந்துள்ளனர்.
முகத்தில் ஒட்டியிருக்கும்
இவை சிலந்தியுடன் தொடர்புடைய பூச்சிகள் நாம் தூங்கும் போது நம் தோலில் சுரக்கும் மெலடோனின் திரவத்தை பயன்படுத்தி தங்கள் இனப்பெருக்க விருத்திக்கு பயன்படுத்துகின்றன.
இந்த பூச்சிகளை நாம் மைக்ரோஸ்கோப் மூலம் மட்டுமே நாம் பர்க்க முடியுமாம். இவை நாம் பிறக்கும்போதே இவை நம் உடலில் இருக்கின்றன. எனினும், ஒரு குழந்தை வளர வளர இதன் எண்ணிக்கை அதன் உடலில் அதிகரித்து கொண்டே இருக்கும்.
அந்த பூச்சிகளின் முழுமையான டிஎன்ஏ பகுப்பாய்வு மூலம் இதனை ஆராய்ச்சியாளர்கள் உறுதிபடுத்தியுள்ளனர். 48,000 க்கும் மேற்பட்ட பூச்சி இனங்களில் இரண்டு வகை இணங்கள் மட்டுமே நம் முகங்களில் வாழ்கின்றன.
பூச்சுகளால் முகத்திற்கு ஏற்படும் நன்மை என்ன?
இந்த பூச்சிகள் முகப்பரு மற்றும் வடுக்கள் ஏற்படாமல், முகத்தில் உள்ள துளைகள் அடைக்கப்படாமல் பாதுகாக்கின்றன. இரவு நேரத்தில் மனித தோலில் சுரக்கும் மெலடோனினை இவை பயன்படுத்தி இனப்பெருக்கம் கொள்கின்றன.
இத்தகைய விசித்திரமான இனச்சேர்க்கை பழக்கத்திற்கு உதவுகிறது. ஆண் பூச்சிகளுக்கு அவற்றின் உடலில் உள்ள ஆண்குறி, உடலின் முன்பகுதியில் இருந்து மேல்நோக்கி நீண்டுள்ளது. இவை இயற்கையின் அதிசயங்களில் ஒன்று தான்.
