3500 வருடங்களின் பின் கண்டுபிடிக்கபட்ட நகரம் : மலை உச்சியின் மர்ம தகவல்
பெரு நாட்டின் வடக்கு பரங்கா மாகாணத்தில் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு பழமையான வர்த்தக நகரம் "பெனிகோ (Peñico)" சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
"பெனிகோ (Peñico)"
பெரு நாட்டின் வடக்கு பரங்கா மாகாணத்தில், சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஒரு பழமையான வர்த்தக நகரம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
“பெனிகோ” (Peñico) என அழைக்கப்படும் இந்த நகரம், காலந்தோறும் மறைந்திருந்த ஒரு மிக முக்கிய வர்த்தகக் கட்டமைப்பாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்ததுப்படி, இந்த நகரம் பசுபிக் கடற்கரை, ஆண்டீஸ் மலைத்தொடர், மற்றும் அமேசான் காடுகள் ஆகியவற்றை இணைக்கும் வழித்தட சந்திப்பாக இருந்திருக்க வாய்ப்பு உள்ளது.
ட்ரோன் மூலம் படம் பிடிக்கப்பட்ட காட்சிகளில், சமுத்திர மட்டத்திலிருந்து சுமார் 600 மீட்டர் உயரத்தில் உள்ள ஒரு மலைத் தரிசு பகுதியில், மையக் கட்டடத்தின் இடிபாடுகள், கல் மற்றும் மண் கட்டிடங்களின் தடயங்கள் தெளிவாகக் காணப்படுகின்றன.
இந்த நகரத்தின் அமைவிடம், கட்டுமானங்கள், மற்றும் அதன் வலையமைப்பு, முன்னோர்களின் நாகரிக அறிவும், வர்த்தகத் திறமையும் வெளிப்படுத்துகிறது.
இது, அந்த காலகட்டத்தில் பெருவின் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் கலாசார பரிமாற்றத்தின் முக்கியக் கட்டமாக இருந்திருக்கக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
18 கட்டிடங்கள்
பெரு நாட்டின் வடக்கு பரங்கா மாகாணத்தில் கண்டெடுக்கப்பட்ட பெனிகோ (Peñico) நகரம், கிமு 1800 முதல் 1500 வரை தோன்றியதாக நம்பப்படுகிறது.
இது, அமெரிக்காவின் மிகவும் பழமையான நாகரிகமாகக் கருதப்படும் கரால் (Caral) நகரத்துடன் தொடர்புடையதாகவும், அதன் தொடர்ச்சியாகவே வளர்ந்ததாகவும், ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கண்டுபிடிப்பை வழிநடத்திய ஆராய்ச்சி குழுத் தலைவர் ரூத் ஷாடி (Ruth Shady) கூறுகையில்: “கரால் நாகரிகம் காலநிலை மாற்றத்தால் வீழ்ந்த பிறகு, பெனிகோ நகரம் தோன்றியது.
வர்த்தக தொடர்புகளுக்கான முக்கிய மையமாக இது அமைந்தது.” எனக் குறிப்பிட்டார். மேலும், பெரு கலாசார அமைச்சகத்தின் முக்கிய ஆய்வாளர் மார்கோ மச்சாகுவாய் 8 ஆண்டுகள் நீடித்த ஆய்வுப் பணியின் பின்னர், பெனிகோ நகரத்தில் மொத்தம் 18 முக்கிய கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
- பூஜைக் கோவில்கள்
- குடியிருப்பு வளாகங்கள்
- சிற்ப சுவரோவியங்களுடன் கூடிய மையச் சதுக்கம்
- புடுடு (கடற்கழல் ஊதுவாயி) ஒலிக்கான சிற்பங்கள்
- மண்ணால் செய்யப்பட்ட மனித மற்றும் விலங்கு சிலைகள்
- கடல் முத்துகள் மற்றும் மணிமுத்து அணிகலன்கள் ஆகியவை அடங்கும்.
இந்தப் புதைக் கண்டுபிடிப்பு, மாச்சூ பிச்சூ (Machu Picchu) மற்றும் நாஸ்கா கோடுகள் (Nazca Lines) போன்ற உலகப் புகழ்பெற்ற பெருவின் தொல்பொருள் இடங்களின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |