Secret Hair Oil: முடி சும்மா காடு மாதிரி கருகருணு வளரணுமா? கேரளா பெண்களின் ரகசியம்
பெண்களுக்கு இயற்கையாக நீளமான, கருமைமிக்க காடு மாதிரி கூந்தல் வளர வேண்டும் என்பது ஒரு சாதாரணமான ஆசை.
அதைவிட அதிகமாக, கேரளா பெண்களைப் போல பளபளப்பாகவும், நிறமானதும் நீளமிக்க கூந்தலை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் இப்போது அதிகரித்து வருகிறது.
இதனால், "காடு போல் முடி வளர என்ன செய்ய வேண்டும்?" என்று ஆர்வமுடன் ஆராயும் பெண்கள், கேரளா பெண்கள் பயன்படுத்தும் சீக்ரெட் ஹேர் ஆயிலின் ரகசியம் என்ன என்பதைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
இவாகளின் சீக்ரட் ஹேர் ஒயிலில் ரெட் வெல்வட் ஆயில் மிகவும் சிறந்தது. இந்த ஹேர் ஆயிலை வீட்டிலேயே எளிமையாக தயாரித்து, எப்படி பயன்படுத்துவது என்பது பற்றிய தகவல்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. இதை இந்த பதிவின் மூலம் பெறலாம்.
கேரளா ரெட் வெல்வட் ஆயில்
இந்த கேரளா பெண்களின் ரெட் வெல்வட் ஆயில் தயாரிக்க தேங்காய் எண்ணெய் – 2 கப் செம்பருத்தி பூ – 10 கருவேப்பிலை – ஒரு கொத்து கருக்கசீரகம் – 2 ஸ்பூன் மஞ்சளிநூல் – 10 எண்ணிக்கை சங்குப்பூ – 10 வெந்தயம் – 2 ஸ்பூன் போன்றவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மேலே குறிப்பிடப்பட்ட அனைத்து இயற்கை பொருட்களையும் ஒன்றாக கலந்து, அதை நன்றாக ஊற விட வேண்டும். குறைந்தபட்சம் 10 நாட்கள் வரை ஊறவைக்க வேண்டும், அதுவும் நன்றாக நன்கு வெயிலில்.
10 நாட்களுக்குப் பிறகு, அந்தக் கலவையை நன்றாக தணிந்த நிழலில் உலர்த்தி, அதன் பிறகு உள்ள எண்ணெயை மட்டும் பிரித்தெடுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த எண்ணெயே தான், கருகருந்து, நீளமிக்க காடு மாதிரி முடி வளர கேரளா பெண்கள் பயன்படுத்தும் ரெசிபியில் முக்கியமான "வெல்ல்வெட் ஹேர் ஆயில்".
இது முறையாக பயன்படுத்தினால், முடி வேரில் ஊட்டச்சத்து சேர்க்கும், உடைத்தன்மை குறைக்கும், மற்றும் வளர்ச்சியை தூண்டும்.
இந்த எண்ணையை தினமும் இரவில் தூங்கச்செல்லும் முன்னர் தலையில் நன்கு தடவி கைகளை கொண்டு மசாஜ் செய்து பின்னர் தலைமுடியை பின்னி விட்டு தூங்கச் செல்ல வேண்டும்.
இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் முடி வளர்ச்சியில் நல்ல மாற்றம் கிடைக்கும். ஒரு வாரத்திலேயே தலையில் பேபி ஹேர் வளர தொடங்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |