பீர்க்கங்காயை சுவையூட்டியில்லாமல் சமைக்க தெரியுமா? வேர்க்கடலை இருந்தாலே போதுமாம்
பொதுவாக மதிய நேரத்திற்கு சமைக்கும் பொழுது வித்தியாசமாக என்ன சரி செய்யலாம் என நினைத்து கொண்டிருப்போம்.
அப்படி இருப்பவர்கள் பீர்க்காய் வைத்து குழம்பு செய்யலாம். இதனை தோசை, இட்லி மற்றும் சாதத்துடன் வைத்து கூட சாப்பிடலாம்.
வீட்டிலுள்ள குழந்தைகள் இது போல் காய்கறிகள் குழம்பு சாப்பிட மாட்டார்கள் சுவையூட்டிகள் இல்லாமல் எப்படி நாவிற்கு இதமாக சமைக்கலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
* வேர்க்கடலை - 3 டேபிள் ஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
* பூண்டு - 5 பல்
* பச்சை மிளகாய் - 4
* புளி - 1/4 இன்ச்
* கறிவேப்பிலை - சிறிது
* வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது)
* தக்காளி - 2 (நறுக்கியது)
* பீர்க்கங்காய் - 250 கிராம் (தோலுரித்து நறுக்கியது)
* மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* வெல்லம் - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்
* நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
* கடுகு - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* வரமிளகாய் - 2
பீர்க்காய் குழம்பு செய்முறை
1. முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் வேர்க்கடலை, கடலைப் பருப்பு, பூண்டு, பச்சை மிளகாய், புளி, கறிவேப்பிலை ஒன்றாக போட்டு வறுத்தெடுக்கவும்.
2. பின்னர் ஒரு தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.
3. அதே கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
4. வதங்கிய வெங்காயத்துடன் பீர்க்கங்காயை சேர்த்து, மஞ்சள் தூள், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி,10 நிமிடம் வரை மூடி வேக விடவும்.
5. கடைசியாக கொஞ்சமாக வெல்லம்,கொத்தமல்லியைத் தூவி இறக்கி 2 நிமிடங்கள் ஆற விட வேண்டும்.
6. ஆறிய பின்னர் மிக்ஸி சாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
7. பின்னர் சட்னியை ஒரு அளவான பாத்திரத்திற்கு மாற்றி , கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்து இறக்கினால் சுவையான பீர்க்காய் சட்னி தயார்!
முக்கிய குறிப்பு
சட்னியாகவும் சாப்பிடலாம், குழம்பாகவும் சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |