மகளுக்காக தொழிலை மாற்றிய வனிதா! அப்போ இது பிக்பாஸ் வீடு வர போகுதா?
மகளுக்காக நடிகை வனிதா தன்னுடைய தொழிலை மாற்றியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
ஜோவிகா
வாயாடி பெத்த புள்ள என்ற பெயருடன் பிக்பாஸ் வீட்டில் பட்டையை கிளப்பி வருபவர் தான் ஜோவிகா விஜயகுமார்.
இவருக்கு நாட்கள் செல்ல செல்ல ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. வனிதாவை போல் அல்லாமல் தனக்கு கொடுத்த வேலையை திறன்பட செய்து வருகிறார்.
இதனால் ரசிகர்கள், பார்ப்பதற்கு மிகவும் அழகாக, அம்மாவையே போன்றே தெளிவாக, புத்திசாலித்தனமாக இருப்பதாக பலர் கூறி வருகின்றனர்.
இவர் தன்னுடைய ஆரம்ப பள்ளி படிப்பை சரியாக படிக்கவில்லை என பலரால் ட்ரோல் செய்யப்பட்டு வந்தார். ஆனால் ஜோவிகா நடந்து கொள்வதை பார்த்தால் படிக்காத பிள்ளை போல் தெரியவில்லை.
இந்த நிலையில் ஜோவிகா ஒவ்வொரு நாளும் பிக்பாஸ் வீட்டில் போடும் ஆடைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தொழிலை மாற்றிய வனிதா
அத்துடன் ஜோவிகாவின் உயரத்திற்கும் அவரின் வடிவத்திற்கும் ஏற்ப ஆடைகள் போடுகிறார். இது குறித்து நெட்டிசன்கள் தேடி பார்த்த போது ஒரு உண்மை வெளியாகியுள்ளது.
ஜோவிகா ஒவ்வொரு நாளும் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக ஜோவிகா போடும் ஆடைகளை வனிதா தான் டிசைன் செய்கிறாராம்.
அத்துடன் நடிப்பு, சீரிஸ் இவற்றையெல்லாம் தாண்டி மகளுக்காக இப்படி நடந்து கொள்வது மகிழ்ச்சியாக இருக்கின்றது.
ஜோவிகாவிற்கு முன்னர் நடிகை ஸ்ரீதேவிக்கு இவர் தான் ஆடை, மற்றும் மேக்கப் செய்வாராம்.
இவரை தொடர்ந்து அவருடைய பெண்ணிற்கு செய்கிறார். தாய் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் குழந்தைக்கு அம்மாவாக இருக்கும் போது அவர் மீதுள்ள மதிப்பு இரட்டிப்பாகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |