இதய நோய்களின் வேர்க்கடலை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
இஸ்கிமிக் ஸ்ட்ரோக் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் சக்தி வேர்க்கடலைக்கு உண்டு என கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
ஆசிய நாட்டில் ஸ்ட்ரோக் பாதிப்புகள் குறைவாக இருப்பதாக ஆராச்சியாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.
உணவு பட்டியலில் தினமும் சராசரியாக 4-5 வேர்க்கடலைகளை சேர்ப்பது ‘இஸ்கிமிக் ஸ்ட்ரோக்’கை தடுக்க உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சனிப்பெயர்ச்சி 2022 ! உக்கரமாகும் நேரத்தில் உச்சத்தை தொடப் போகும் 5 ராசிக்காரர்கள்...
இஸ்கிமிக் ஸ்ட்ரோக் என்றால் என்ன?
இஸ்கிமிக் ஸ்ட்ரோக் என்பது மூளைக்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு அல்லது ரத்தம் உறைவது போன்ற பிரச்சினைகளால் ஏற்படும் பக்கவாதமாகும்.
வேர்க்கடலையில் இதய ஆரோக்கியத்துக்கு வலு சேர்க்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
அதாவது மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து போன்றவை உயர் ரத்த அழுத்தம், கெட்ட கொழுப்பு போன்ற ஆபத்து காரணிகளைக் குறைப்பதன் மூலம் இதய நோய்களில் இருந்து காக்கின்றன என்றும் ஆராச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்க இதய அசோசியேஷனின் ஒரு பிரிவான அமெரிக்கன் ஸ்ட்ரோக் அசோசியேஷன் இதழான ‘ஸ்ட்ரோக்’ இதழில் இந்த ஆய்வின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள என்பதும் குறிப்பிடத்தக்கது.