peanut chutney: இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வேர்கடலை சட்னி...
நிலக்கடலை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இது சுவையாக இருப்பது மட்டுமன்றி உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கின்றது.
இது பாதாம் பருப்புக்கு நிகரான ஊட்டச்சத்துக்களைக் கொடுப்பதாலேயே இது ஏழைகளின் பதாம் என அழைக்கப்படுகின்றது. அவை புரதம், கால்சியம், நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் ஈ மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளுயும் கொண்டுள்ளது.
இது தவிர, துத்தநாகம், செலினியம் மற்றும் தாமிரம் நிறைந்துள்ளது. இதன் நுகர்வு உடல் ஆரோக்கியத்திற்கும், மனநலம், தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கும் பெரிதும் துணைப்புரிகின்றது.
வேர்க்கடலையில் ஆரோக்கியமான கொழுப்புகள் செறிவாக இருப்பதால், கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. இதன் காரணமாக உங்கள் இதயம் ஆரோக்கியமாகவும் சீராகவும் இயங்க உதவும்.
அது மட்டுமன்றி வேர்க்கடலையில் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்து அதிகமாக இருப்பதால், இவை பசியைக் குறைக்க உதவுகின்றன, இது எடை இழப்புக்கு உதவும்.
இதனால், அடிக்கடி சாப்பிடுவது கட்டுப்படுத்தப்படும். நீண்ட நேரம் படி எடுக்காமல் வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும். இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த வேர்க்கடலையை கொண்டு எவ்வாறு அசத்தல் சுவையில் சட்னி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வேர்க்கடலை - 1/2 கப்
துருவிய தேங்காய் - 1/2 கப்
புளி - சிறிய துண்டு
வரமிளகாய் - 2 அல்லது 3
உப்பு - சுவைக்கேற்ப
பூண்டு - 3 பல்
தண்ணீர் - சிறிதளவு
தாளிப்பதற்கு தேவையானவை
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயத் தூள் - 1/4 தே.கரண்டி
செய்முறை
முதலில் ஒரு பாத்திதை்தை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலையை போட்டு நன்றாக வறுத்து எடுத்து இறக்கி குளிரவிட வேண்டும்.
அது நன்றாக ஆறியதும் வறுத்த வேர்க்கடலையை மிக்சர் ஜாரில் சேர்த்து, அத்துடன் 1/2 கப் துருவிய தேங்காய், சிறிது புளி, வரமிளகாய், சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றை சேர்த்து, அத்துடன் பூண்டு பற்களை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்துக் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி, அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
கடைசியான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்தால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் வேர்க்கடலை சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |