மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைலில் மிளகு தூள் சாதம், நெல்லிக்காய் பச்சடி செய்வது எப்படி?
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெரும் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.
குக் வித் கோமாளி வெற்றிகரமாக தன்னுடைய 5 சீசன்களை நிறைவு செய்து விட்டு, தற்போது ஆறாவது சீசனில் சென்றுக் கொண்டிருக்கிறது.
குக் வித் கோமாளியில் பிரபலங்கள் செய்யும் பல ரெசிபிக்களை வீட்டில் செய்து பார்ப்பது வழக்கம். ஒருவர் ஆரோக்கியமாக இருக்க உணவு மிக முக்கியம் என்றாலும், அதனை சுவையாக சமைக்க வேண்டும்.
அந்த வகையில் பிரபல குக் மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்பெஷல் பழையகோட்டை மிளகு பொடி சாதம் நெல்லிக்காய் பச்சடி எப்படி செய்யலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- அரிசி - 1 கப்
- கடுகு - 1 ஸ்பூன்
- வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
- மிளகு - 1 ஸ்பூன்
- கொத்தமல்லி விதைகள் - 1.1/2 டீஸ்பூன்
- சிவப்பு மிளகாய் - 5
- அரிசி - 1 டீஸ்பூன்
- பாலாடை - 2 ஸ்பூன்
- உப்பு - சிறிது
மிளகு பொடி சாதம் ரெசிபி
முதலில் ஒரு லிட்டர் பாலை சுண்ட காய்ச்சி தனியே எடுத்து வைத்து விட்டு, பால் சூடு ஆறியதும் அதற்கு மேல் படித்திருக்கும் பாலாடையை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்து வைக்கவும்.
அதன் பின்னர், பிரஷர் குக்கரில் 1 கப் அரிசிக்கு 4 கப் தண்ணீர் சேர்த்து 3-4 விசில் வேக வைத்து இறக்கவும்.
அடுத்து, ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் இல்லாமல் மசாலாக்களை தனித்தனியாக வறுத்து இறக்கவும்.
மசாலா பொருட்கள் நன்கு ஆறியதும் மிக்ஸி ஜாரில் போடு நன்கு அரைத்து பொடியை தனியாக எடுத்து வைக்கவும்.
1 கப் சமைத்த அரிசியில் 4 டீஸ்பூன் நெய், 2 டீஸ்பூன் பாலாடை, 4-5 டீஸ்பூன் தயார் செய்த மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டால் பழையகோட்டை மிளகு பொடி சாதம் தயார்!
நெல்லிக்காய் பச்சடி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
- முழு நெல்லிக்காய் - 6-7
- தயிர் - 2 கப்
- தேங்காய் துருவல் - 1/4 கப்
- கொத்தமல்லி இலை - 1/4 டீஸ்பூன்
- மிளகு - 1/4 டீஸ்பூன்
- பூண்டு - 10
- சின்ன வெங்காயம் - 10
- இஞ்சி - 1 இன்ச்
- சீரகம் - 1 டீஸ்பூன்
செய்முறை
நெல்லிக்காய் பச்சடி செய்ய முதலில் ஒரு இட்லி பாத்திரத்தில் 6-7 நெல்லிக்காய்களை போட்டு நீராவியில் 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.
அதன் பின்னர். ஒரு மிக்ஸி ஜாரில் 5 வேக வைத்த நெல்லிக்காயை சேர்த்து பேஸ்ட் செய்யவும்.
இதையடுத்து, மிக்சியில் 1/4 கப் தேங்காய் துருவல், 1/4 டீஸ்பூன் கொத்தமல்லி, 1/4 டீஸ்பூன் மிளகு, 10 பூண்டு, 10 சின்ன வெங்காயம், 1 இன்ச் இஞ்சி, 1 டீஸ்பூன் சீரகம் ஆகிய பொருட்களை ஒன்றாக போட்டு பேஸ்ட் போன்று அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
தயாரிக்கப்பட்ட பேஸ்ட்டை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி, கிரைண்டர் ஆம்லா பேஸ்ட், 2 கப் தயிர், நறுக்கிய நெல்லிக்காய் 1/4 கப், உப்பு சேர்த்து கலந்து விட்டால் நெல்லிக்காய் பச்சடி தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |