அமீருடன் நெருக்கமாக பாவனி! ஒருவழியாக காதலை கூறிய பாவனி
பிக்பாஸ் அமீரின் பிறந்தநாளில் வாழ்த்து தெரிவித்த பாவனி இறுதியாக தனது காதலை கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அமீர் பாவனி ஜோடி
பிக்பாஸில் கலந்து கொண்டு காதலர்களாக ரசிகர்களை கவர்ந்து வரும் அமீர் மற்றும் பாவனி பிபி ஜோடியில் கலக்கி வருகின்றனர்.
பிக் பாஸ் ஷோவில் பங்கேற்ற முதல் வாரத்திலேயே தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவர் தற்கொலை செய்து கொண்டது பற்றி மிக உருக்கமாக பேசி இருந்தார்.
இது நிகழ்ச்சியை பார்ப்பவர்களை கலக்கமடைய வைத்த நிலையில், வைல்டு கார்டு என்டிரியாக வந்த டான்ஸ் மாஸ்டர் அமீர் என்பவர் பாவனியிடம் தனது காதலை கூறிய நிலையில், காதலை எற்காமல் பாவனி நாட்களை கடத்தி வந்தார்.
தற்போது பாவனி மற்றும் அமீர் இருவரும் ஜோடியாக பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஆடி வருகின்றனர். அவர்களது நெருக்கத்தை பார்த்து இருவரும் காதலிக்க தொடங்கிவிட்டார்களா என்கிற கேள்வியை தான் நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

காதலை கூறிய பாவனி
இதற்கிடையே பாவனி அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமீருக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்து அவருடனான நெருக்கமான எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
மேலும் அமீர் குறித்து பதிவிட்டது மட்டுமின்றி அவரை love you da எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பாவனி ஒரு வழியாக தனது காதலை ஒப்புக்கொண்டார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.