பிக்பாஸ் பவானி குறித்து முன்னாள் காதலனின் உருக்கமான பதிவு
தன்னுடைய முன்னாள் காதலியும், பிக்பாஸ் போட்டியாளருமான பவானி ரெட்டி குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார் நடிகர் ஆனந்த் ஜாய்.
பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 5ல் இசைவாணி, ராஜு ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமீதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய் வாடி, சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்ஷரா, தாமரை செல்வி, சிபி சந்திரன், நிரூப் நந்தகுமார் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் தனிப்பட்ட காரணங்களால் நமீதா மாரிமுத்து, நிகழ்ச்சியை விட்டு வெளியேற, தற்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர்.
இதில் கலந்து கொண்டுள்ள பவானி ரெட்டிக்கு, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு எகிறத் தொடங்கியுள்ளது.
“ஒரு கத சொல்லட்டுமா சார்” என்ற டாஸ்கில் தன்னுடைய கணவர் மரணம் குறித்து அவர் பகிர்ந்து கொண்ட தகவல்கள் ரசிகர்களை உருக வைத்தன.
மேலும் கணவர் இறந்த பின்னர், வேறொரு நபருடன் ரிலேஷன்சிப்பில் பவானி இருந்ததாகவும், திருமணம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இது வெறும் வதந்தியே என அவரது சகோதரி விளக்கம் அளித்திருந்தார், இதற்கிடையே குறித்த நடிகரான ஆனந்த் ஜாய் இன்ஸ்டாகிராமில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "ராணி... எனக்கு தட்டச்சு செய்ய எந்த கடிதமும் இல்லை.. தயவுசெய்து அவளுக்கு ஆதரவளிக்கவும். அவள் வாழ்க்கையில் நிறைய அனுபவித்திருக்கிறாள்.
அவள் என் சிறந்த தோழி மட்டுமல்ல. அதற்கும் மேல்... துர்கா எனும் பாவனி ரெட்டி என்றென்றும். உலகின் மிக அழகான நபர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
