ரத்த சர்க்கரையை சட்னுன்னு குறைக்கணுமா? பாகற்காயை இப்படி சாப்பிடுங்க

Weight Loss Constipation Healthy Food Recipes Diabetes
By Vinoja Apr 05, 2026 03:10 PM GMT
Report

பொதுவாகவே ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்களை அதிகளவில் கொண்டிருக்கும் காய்கறிகளின் பட்டியலில் பாகற்காய் முக்கிய இடம்வகிக்கின்றது.

பாகற்காயில் அதிகளில் வைட்டமின் சி சத்து, நார்ச்சத்து காணப்படுவமதால் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதிலும் செரிமான அமைப்பை சீராக்குவதிலும் ஆற்றல் காட்டுகின்றது.

ரத்த சர்க்கரையை சட்னுன்னு குறைக்கணுமா? பாகற்காயை இப்படி சாப்பிடுங்க | Pavakkai Thokku Recipe For Diabetes

எனவே தான் இது நீரிழிவு நோயாளிகளுக்கு அடிக்கடி பரிந்துரை செய்யப்படும் காய்கறியாகும். உடலில் ரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துவதால் உடலில் உள்ள பல பிரச்னைகள் தடுக்கப்படுகின்றன.

குறிப்பாக உடல் எடையை கட்டுப்படுத்த வேண்டும் என போராடுபவர்களுக்கும் பாகற்காய் சிறந்த தெரிவாக இருக்கும். இதில் குறைந்த கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளதால், உடல் எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

ரத்த சர்க்கரையை சட்னுன்னு குறைக்கணுமா? பாகற்காயை இப்படி சாப்பிடுங்க | Pavakkai Thokku Recipe For Diabetes

அதேநேரத்தில், உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் இதில் நிறைந்துள்ளன. ஆரோக்கியமாக உடல் எடையைப் பராமரிக்க விரும்புபவர்களுக்கு பாகற்காய் வரு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும்.

இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள பாகற்காயில் கொஞ்சமும் கசப்புத்தன்மை இல்லாமல் அசத்தல் சுவையில் எவ்வாறு தொக்கு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

ரத்த சர்க்கரையை சட்னுன்னு குறைக்கணுமா? பாகற்காயை இப்படி சாப்பிடுங்க | Pavakkai Thokku Recipe For Diabetes

தேங்காய் சட்னியில் இவ்வளவு நன்மைகளா? இனியும் தவிர்க்காதீங்க

தேங்காய் சட்னியில் இவ்வளவு நன்மைகளா? இனியும் தவிர்க்காதீங்க

தேவையான பொருட்கள்

பாகற்காய் - 500 கிராம்

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)

மஞ்சள் தூள் - ½ தே.கரண்டி

மிளகாய் தூள் - 1 மேசைக்கரண்டி

புளி - பெரிய எலுமிச்சை அளவு (கரைத்தது)

வெல்லம் - 50 கிராம்

அரிசி - 1 மேசைக்கரண்டி 

துவரம் பருப்பு - ½ மேசைக்கரண்டி

கடலை பருப்பு - ½ மேசைக்கரண்டி

கசகசா - ½ தே.கரண்டி

உப்பு - தேவையான அளவு

ரத்த சர்க்கரையை சட்னுன்னு குறைக்கணுமா? பாகற்காயை இப்படி சாப்பிடுங்க | Pavakkai Thokku Recipe For Diabetes

தாளிக்க தேவையானவை

எண்ணெய் - தேவையான அளவு

கடுகு - ½ தே.கரண்டி 

உளுத்தம் பருப்பு - ½ தே.கரண்டி

சீரகம் - ½ தே.கரண்டி 

பெருங்காயம் - ½ சிற்றிகையளவு

கருவேப்பிலை - 1 ஒரு கொத்து

செய்முறை 

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் அரிசி மற்றும் கசகசா சேர்த்து நன்றாக வாசனை வரும் வரையில் வறுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் துவரம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பு ஆதியவற்றை சேர்த்து நன்றாக வறுத்து இறக்கி ஆறவிட வேண்டும். 

ரத்த சர்க்கரையை சட்னுன்னு குறைக்கணுமா? பாகற்காயை இப்படி சாப்பிடுங்க | Pavakkai Thokku Recipe For Diabetes

அவை ஆறியதும் ஒரு  மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து தனியாக எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து பாகற்காயை நன்றாக தண்ணீரில் கழுவி விதை நீக்கி பொடியாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் பாத்திரமொன்றை  அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு சேர்த்து பொரிய விட வேண்டும்.

கடுகு பொரிந்ததும் சீரகம், மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து, அதனுடன் உளுந்தம் பருப்பு சேர்த்து சிவக்கும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

ரத்த சர்க்கரையை சட்னுன்னு குறைக்கணுமா? பாகற்காயை இப்படி சாப்பிடுங்க | Pavakkai Thokku Recipe For Diabetes

இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்... புற்றுநோயாக கூட இருக்கலாம்

இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்... புற்றுநோயாக கூட இருக்கலாம்

பின்னர் அதனுடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அதில் நறுக்கி வைத்த பாகற்காயையும் சேர்த்து நன்றாக வதக்கியெடுத்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து நறுக்கிய தக்காளி சேர்த்து மென்மையாக வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்துவிட்டு வதக்கிக்கொள்ள வேண்டும். 

அவை நன்றாக வெந்து குழைந்து வந்ததும் புளி கரைசலை சேர்த்து, நன்றாக கிளறிவிட்டு, வெல்லத்தை பொடி செய்து சேர்த்து கிளறிக்கொள்ள வேண்டும். 

தொக்கு பதத்துக்கு வந்ததும் அரைத்து வைத்த அரிசி மற்றும் பருப்பு கலவையை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு, கெட்டிப்படும் போது இறக்கினால் அவ்வளவு தான் அருமையான சுவையில் ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த பாகற்காய் தொக்கு தயார்.  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US