கசப்புத் தன்மை கொஞ்சமும் தெரியாமல் பாகற்காய் குழம்பு வேணுமா? அப்போ இதுதான் பெஸ்ட் ரெசிபி
பொதுவாகவே பாகற்காய் என்றதுமே அனைவரும் முகம் சுழிப்பதற்கு காரணம் அதன் கசப்புத் தன்மை தான். இது கசப்பாக இருந்தாலும் பல்வேறு ஆரோக்கியம் தரக்கூடிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது.
பாகற்காய் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயன்தரக்கூடியது, உடலில் சர்க்கரை அளவை கணிசமாக குறைக்க உதவும்.
குழந்தைகளுக்கும் பாகற்காய் கொடுப்பது மிகவும் நல்லது, குடற்புழுக்கள் தொடர்பான பிரச்சினைகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இது மிகச்சிறந்த தீர்வை கொடுக்கும். இதன் கசப்பு தன்மை காரணமாக குழந்தைகள் மட்டுமன்றி பெரியவரகளும் கூட இதை விரும்புவதில்லை.
ஆனால் கசப்புத் தன்மை கொஞ்சமும் தெரியாமல் இது பாகற்காய் குழம்பா? என கேட்கும் அளவுக்கு சுவையான பாகற்காய் குழம்பு எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.
செய்முறை
அரை மூடி தேங்காய் 10 சின்ன வெங்காயம் 1 தே. கரண்டி சீரகம் 1 தே. கரண்டி மிளகு ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் தேயைான அளவு நல்லெண்ணெய் சேர்த்து எண்ணெய் நன்றாக கொதித்தவுடன் சிறிதளவு கடுகு மற்றும் வெந்தியம் சேர்த்து பொரியவிட்டு தேவையான அளவு கறிவேப்பிலை மற்றும் நறுக்கிய பெரிய வெங்காயம் 2 ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளள வேண்டும்.
வெங்காயம் லேசாக வதங்கிய உடன் வட்ட வடிவில் வெட்டப்பட்ட விதை நீக்கிய பாகற்காயை அதனுடன் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
எந்தளவு பாகற்காய் வதங்குகின்றதோ அந்த அளவுக்கு கசப்புத்தன்மை போய்விடும். நன்றாக வதங்திய பின்னர் 1/4 தே. கரண்டி மஞ்சள் தூள் மற்றும் 3 தே. கரண்டி வீட்டில் அரைத்த குழம்பு மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.
அதன் பின்னர் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். வதங்கிய பின்னர் சிறிதளவு புளி கரைசல் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு, ஏற்கனவே அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்டை அதனுடன் சேர்த்து, குழம்புக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
குழம்பு கெட்டியான பதத்துக்கு வந்தவுடன் பரிமாறினால் சுவையான கசப்பே இல்லாத பாகற்காய் குழம்பு தயார்.இந்த முறையில் பாகற்காய் குழம்பு செய்து கொடுத்தால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |