கசப்பாக இருக்கும் பாகற்காயை இப்படி செய்து சாப்பிட்டால் எல்லோருக்கும் பிடிக்கும்!
பொதுவாகவே பாகற்காய் என்றால் சகப்பாக இருப்பதால் அதை யாருக்கும் பிடிப்பதில்லை. ஆனால் பாகற்காய் உங்கள் உடலுக்கு அவ்வளவு நல்லது.
பாகற்காயானது உணவுப் பையிலுள்ள பூச்சியைக் கொல்லும். பசியைத் தூண்டும்., பித்தத்தைத் தணிக்கும். பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவும்.
பாகற்காயை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப் புழுவை நீங்கும். இப்படி பல நன்மைகளை கொண்ட பாகற்காயை உணவிலிருந்து ஒதுக்குவது எமது உடலுக்குத் தான் தீங்கு.
பாகற்காய் கசப்புத்தண்மை இருப்பதால் தான் அதனை வெறுக்கிறார்கள். ஆனால் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இப்படி ஒரு தடவை பாகற்காய் ஃபிரை செய்து கொடுத்துப்பாருங்கள்.
இப்போது பாகற்காய் ஃபிரை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பாகற்காய் - 1/4 கிலோ
- மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
- தனி மிளகாய் தூள் - 1 1/2 டீஸ்பூன்
- மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்
- கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
- கடலை மாவு - 2 டீஸ்பூன்
- அரிசி மாவு - 2 டீஸ்பூன்
- இஞ்சி, பூண்டு விழுது
- உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
பாகற்காயை வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். இளம் பாகற்காய் என்றால் விதைகளை நீக்க வேண்டிய அவசியமில்லை.
இதிலுள்ள கசப்புத் தன்மையை நீக்குவதற்காக ஒரு டீஸ்பூன் உப்பு, மஞ்சளை சேர்த்து கலக்கி 15 நிமிடங்களுக்கு ஒரு டீஸ்பூன் உப்பு, மஞ்சளை சேர்த்து கலக்கி 15 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
பின்னர், பாகற்காயை நன்றாக தண்ணீரில் கழுவவும்.
பாகற்காயுடன் தனி மிளகாய் தூள், மிளகுத்தூள், கரம் மசாலா, கடலை மா, அரிசி மாவு, இஞ்சி, பூண்டு விழுது மற்றும் அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டியதில்லை அவசியமென்றால் சிறிதளவு தெளிக்கவும்.
இந்த கலவையை நன்றாக பிசறி விட்டு அரை மணி நேரத்துக்கு ஊற வைக்கவும்.
கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் மசாலாவில் ஊறிய பாகற்காய்களை சிறிது சிறிதாகப் போட்டு பொன்னிறமாக முறுகலாக பொரித்தெடுக்கவும்.
இல்லாவிட்டால், சிறிதளவு எண்ணெயை ஊற்றி அடுப்பை குறைவான தணலில் முறுகலாக எடுத்துக் கொடுத்தால் பாகற்காய் ஃபிரை தயார்.