நிர்வாணமாக கழிவறை அருகே கிடக்கும் கொரோனா நோயாளிகள்.. வெளியான அதிர்ச்சி வீடியோ!
கொரோனா நோயாளிகள் நிர்வாணமாக கழிவறையில் கிடக்கும் காட்சியானது சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கொரோனா வைரஸ் இந்தியாவில் இரண்டாவது அலை அதிகரித்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களில் கடுமையான ஊரடங்கு புதுப்பிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஒடிசா மாநிலம், மயூர்பாஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிம்ஸ் கோவிட் மருத்துவமனையில், கொரோனா நோயாளிகள் நிர்வாணமாக மருத்துவமனை கழிவறை அருகில் கிடப்பதும். நோயாளிகளின் படுக்கைகளில் தட்டு உள்ளிட்ட பாத்திரங்கள் இறைந்து கிடப்பது போன்ற காட்சிகள் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த மருத்துவமனைக்கு கொரோனா நோயாளியை பார்க்க அவரது உறவினர் ஒருவர் சென்றபோது, மருத்துவமனையின் நிலையைக் கண்டு அதிர்ந்து இந்த வீடியோவை எடுத்து அவர் வெளியிட்டுள்ளதாக இது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
இதனைத்தொடர்ந்து இச்சம்பவம் பெரியதாகியுள்ள நிலையில் அம்மாவட்ட ஆட்சியர், கிம்ஸ் மருத்துவமனையை பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.
மேலும் அங்கிருந்த கொரோனா நோயாளிகளுடன் பேசிய அவர், மருத்துவமனையில் போதிய வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.