Kerala Pink Water: கேரளா ஸ்பெஷல் தண்ணீர்- உடலின் அனைத்து பிரச்சனைக்கும் ஒரே தீர்வு
கேரளாவுக்கு சென்றால் அங்கே பலரும் இளஞ்சிவப்பு நிற தண்ணீர் அருந்துவரை பார்த்திருப்போம், இது ஏன்? அதிலுள்ள மருத்துவ குணங்கள் என்ன? என்பது குறித்து உங்களுக்கு தெரியுமா?
இந்த தண்ணீர் பதிமுகம் என்ற மரப்பட்டையில் இருந்து தயாரிக்கப்படுகிறது, ஆயுர்வேத மருத்துவத்தில் இதற்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.
உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றவும், செரிமானத்திற்கும் உதவுகிறது, இந்த மரப்பட்டைகளை கொண்டு தயாரிக்கும் தண்ணீரானது எண்ணற்ற நன்மைகள் அள்ளிக்கொடுக்கிறது.
இதை எப்படி தயார் செய்வது?
பாத்திரம் ஒன்றில் ஒரு லிட்டர் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்கவிடுங்கள்.
தண்ணீர் சூடானதும் இரண்டு இன்ச் அளவுக்கு பதிமுகம் பட்டையை சேர்க்கவும், சீவல்களாக இருந்தால் ஒரு டீஸ்பூன் அளவுக்கு சேர்க்கலாம்.
தண்ணீர் கொதிக்க தொடங்கியதும் இளஞ்சிவப்பு நிறத்தில் மாறும், இப்போது அடுப்பை அணைத்து விடலாம்.
சூடு ஆறியதும் இந்த தண்ணீரை பருகலாம், இப்போது தான் அருந்த வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது.
வழமையான தண்ணீருக்கு பதிலாக இதை அருந்தலாம், தனிச்சுவை ஒன்றும் கிடையாது.
பலன்கள்
இந்த தண்ணீரில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் கிருமிகளுக்கு எதிராக போராடும் தன்மை கொண்டது.
எலும்பு பிரச்சனைகளை சரிசெய்வதுடன் சருமத்தை பொலிவாக மாற்றுகிறது.
செரிமானத்தை சீராக்கி வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கிறது.
அல்சர் பிரச்சனை இருப்பவர்கள் தொடர்ந்து எடுத்துக்கொள்வதன் மூலம் வயிற்றுபுண், வாய்ப்புண், குடல்புண்களை ஆற்றும், ஆதாவது உடலினுள் உள்ள புண்களை ஆற்றும் தன்மை இதற்கு உண்டு.
குறிப்பாக ரத்தத்தை சுத்தம் செய்வதுடன் நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.
உடற்சூடு அதிகரிப்பதால் ஏற்படும் மூல நோயை சரிசெய்கிறது, கருப்பையில் உள்ள நச்சுக்களையும் வெளியேற்றுவதால் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலியை போக்கும்.
கோடை காலங்களில் எடுத்துக்கொள்வது சிறந்தது, ஏனெனில் அதிகப்படியான தண்ணீர் தாகத்தை கட்டுப்படுத்தும்.
வலிப்பு நோய்க்கு மிகச்சிறந்த மருந்தும் இதுவே!!!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |