Passort rules: இனி இந்த ஆவணம் இல்லாமல் Passort வாங்க முடியாது.. அதிரடி மாற்றம்
இந்தியாவில் Passort தயாரிக்கும் பணியில் இருக்கும் மத்திய அரசு முக்கிய மாற்றம் செய்துள்ளது.
அக்டோபர் 1, 2023 அன்று அல்லது அதற்கு பின்னர் பிறந்தவர்களின் பிறப்புச் சான்றிதழ்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இனி Passort பெற வேறு பிறந்த தேதிக்கான சான்றாக, பிறப்பு சான்றிதழ் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். பள்ளியில் இருந்து வெளியேறும் சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், பான் அட்டை அல்லது ஆதார் அட்டை போன்ற ஆவணங்கள் பிறந்த தேதிக்கான சான்றாக அங்கீகரிக்கப்பட்டது.
அந்த வகையில், Passort -ஐ பெற என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
Passort பெற தேவையான ஆவணங்கள்
இந்தியாவின் Passort வெளியுறவு அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது. இதற்காக நாடு முழுவதும் 36 Passort அலுவலகங்கள் உள்ளன.
Passort பெறவுள்ளவர்கள், அடையாளச் சான்று, வசிப்பிடச் சான்று மற்றும் பிறந்த தேதிக்கான சான்று உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்களைச் சமர்ப்பிப்பது அவசியம்.
இதற்கு முன்னதாக ஓட்டுநர் உரிமம், பான் அட்டை அல்லது ஆதார் அட்டை ,பள்ளி வெளியேறும் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் பிறந்த தேதிக்கான சான்றாக அங்கீகரிக்கப்பட்டது. மாறாக தற்போது அரசு இதில் மாற்றங்கள் செய்துள்ளது.
அதாவது, அக்டோபர் 1, 2023 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ் மட்டுமே செல்லுபடியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
புதிய விதி யாருக்கு?
தற்போது போடப்பட்டிருக்கும் புதிய விதி அக்டோபர் 1, 2023 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அப்படிப்பட்டவர்களுக்கு Passort பெற வேண்டும் என்றால் பிறப்புச் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், அக்டோபர் 1, 2023க்கு முன் பிறந்தவர்கள், ஓட்டுநர் உரிமம், பள்ளியிலிருந்து வெளியேறும் சான்றிதழ், பான் கார்டு, ஆதார் அட்டை போன்ற மாற்று ஆவணங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
