நடுவானில் பறந்த விமானத்தில் அடுத்தடுத்து மயங்கிய பயணிகள் - நடந்தது என்ன? பரபரப்பு சம்பவம்!
நடுவானில் பறந்த விமானத்தில் பயணிகள் அடுத்தடுத்து மயங்கி விழுந்த சம்பவம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் டேராடூனில் இருந்து மும்பைக்கு தனியார் நிறுவனத்தின் விமானம் ஒன்று சென்றுள்ளது.
அப்போது பெண் பயணி ஒருவர் விமானத்தை வீடியோ எடுக்கையில், சுமார் சுமார் ஐந்தரை மணிக்கு விமானம் மும்பைக்கு கிளம்பியது. ஆறு மணிக்கு மேல் ஆகியும் விமானத்தில் உள்ள ஏசி வேலை செய்யவில்லை.
அதனால் விமானத்தில் அனைவருக்கும் சங்கடமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலரும் தவித்து வந்துள்ளனர். தங்களிடம் இருந்த பேப்பர்களை பயன்படுத்தி வீசி ஓரளவுக்காவது நிம்மதி அடைந்தார்கள்.

பின்னர் உடல் நிலை மோசமாகி மூன்று பேர் மயங்கி விழுந்துள்ளனர். இதில் ஒருவர் கேன்சர் நோயாளி. இதனால் கொந்தளித்த பெண் ஊழியர் ஒருவர் 12 ஆயிரம் ரூபாய் கொடுத்து பயணம் செய்கிறோம்,. தயவு செய்து எதையாவது செய்யுங்கள் என கேட்டுள்ளார்.
இதற்கு விமானம் தரப்பில் உதவி செய்யப்படும் என கோரினாலும், அதன் பின்னும் விமானத்தில் ஏசி இயங்க வில்லை. ஏன் இயங்கவில்லை என்ற சரியான காரணமும் தெரியவில்லை. இதுதொடர்பான செய்திகள் வைரலாகி வருகின்றன.
@GoFirstairways G8 2316 was one of the worst experiences!With Ac’s not working & a full flight,suffocation struck passengers had no way out,sweating profusely paranoid passengers were on the verge of collapsing.3 ppl fainted,a chemo patient couldn’t even breathe.#complaint pic.twitter.com/mqjFiiQHKF
— Roshni Walia (@roshniwalia2001) June 14, 2022