பசங்க திரைப்பட நடிகர் ஸ்ரீராமுக்கு திருமணம் முடிந்தது! வைரலாகும் புகைப்படங்கள்
பசங்க திரைப்படத்தில் ஜீவா கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் ஸ்ரீராமின் திருமணம் புகைப்படங்கள் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
பசங்க திரைப்படம்
நடிகர் சசிகுமாரின் தயாரிப்பில் உருவான படம் தான் பசங்க. இத்திரைப்படத்தில் விமல், வேகா மற்றும் முக்கிய கதாப்பாத்திரங்களில் சிறுவர்கள் பலர் நடித்துள்ளார்.
பசங்க படத்தில் வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் தான் நடிகர் ஸ்ரீராம். அந்த படத்தில் ஜீவா என்ற கதாப்பாத்திரம் படத்தின் ஆரம்பத்தில் நெகடிவ் ஆக இருந்தாலும் இறுதியில் பாசிட்டிவாக மாறும்.ஸ்ரீராம் நடிப்புக்கு அப்போது நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதன் பின்னர் நீண்ட காலம் சினிமாவில் வாய்ப்புகள் வராமல் இருந்த நடிகர் ஸ்ரீராமுக்கு தற்போது திருமணம் நடந்து முடிந்து இருக்கிறது. குறித்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |