பருத்திவீரன் படத்தில் நடித்த பாட்டி மறைவு! இரங்கல் ட்விட் செய்த நடிகர் கார்த்தி!
கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் நடித்திருந்த பஞ்சவர்ணம் என்ற பாட்டி தற்போது காலமானாகியுள்ளார்.
அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான படம் பருத்திவீரன். இந்தப்படத்தில் பஞ்சவர்ணம் பாடி நடித்திருந்தார்.
மேலும், பருத்திவீரன் படத்தில் கார்த்திக்கு அப்பத்தாவாக முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.
இதனிடையே, இவரது மறைவுக்கு நடிகர் கார்த்தி ட்விட்டர் பக்கத்தில், “பருத்திவீரனில் எனது அப்பத்தாவாக வாழ்ந்த பஞ்சவர்ணம் பாட்டி இறந்த செய்தி அறிந்தேன்.
அவரின் பாசமான குரலும், வெள்ளந்தி சிரிப்பும் இன்றும் என் கண் முன்னே நிற்கிறது. அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.?? என இரங்கல் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பருத்திவீரனில் எனது அப்பத்தாவாக வாழ்ந்த பஞ்சவர்ணம் பாட்டி இறந்த செய்தி அறிந்தேன். அவரின் பாசமான குரலும், வெள்ளந்தி சிரிப்பும் இன்றும் என் கண் முன்னே நிற்கிறது. அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.?? pic.twitter.com/jpi3toP49b
— Actor Karthi (@Karthi_Offl) May 6, 2021