இன்ஸ்டாகிராமில் லைக்குகளை அள்ளும் பார்த்திபனின் நெகிழ்ச்சியான பதிவு!
தமிழ்த்திரையுலகில் பன்முகத்திறமைகளைக் கொண்டு இருக்கும் நடிகர் பார்த்திபன் இன்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பதிவொன்றை அதிக லைக்குகளை அள்ளி வருகின்றது.
80மற்றும் 90களில் சுப்பர் ஹிட் படங்களைக் கொடுத்து வந்த பார்த்திபன் 2022ஆம் ஆண்டு இரவின் நிழல், பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் பார்த்திபன் தன் நடிப்பு, இயக்கம் இரண்டிலும் அதீத பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார்.
நாம் அனைவரும் புதுவருடத்தை வழமைப்போல் கொண்டாடி வருகின்றோம். ஆனால் பார்த்திபன் தனது அம்மாவின் பிறந்த தினத்தையும் புத்தாண்டையும் கொண்டாடியிருக்கிறார்.
சென்ற ஆண்டு தனக்கு சிறப்பானதாக அமைந்த உற்சாகத்தில் இந்த ஆண்டு புத்தாண்டை பார்த்திபன் இன்னும் அழகாகக் கொண்டாடி தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இரட்டிப்புக் கொண்டாட்டம்
பார்த்தீபனுக்கு ஜனவரி 1 புத்தாண்டு மாத்திரமல்ல, தனது அம்மாவின் பிறந்தநாளையும் சேர்த்து இரட்டிப்பாக கொண்டாடியுள்ளார்.
அந்தவகையில், இன்று கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் தன் அம்மாவின் வீடியோவை பார்த்தீபன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் “வருடம் மட்டுமல்ல, நான் பிறந்த பூமி பிறந்த தினம்” என அழகாகப் பதிவிட்டுள்ளார். இப்பதிவு மக்களை வெகுவாக கவர்ந்தமையால் அனைவரும் வாழ்த்துக்களையும் லைக்குகளையும் அள்ளிக் கொட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.
மேலும், இந்த ஆண்டு பார்த்திபன் நடிப்பில் ‘பொன்னியின் செல்வன் 2’ படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.