அவர் பொய் சொல்கிறார்... பார்த்திபனை பிரிந்ததற்கு இதுதான் காரணம்! மனம் திறந்த நடிகை சீதா
80களில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சீதா.
இவர் நடித்த ஆண் பாவம், குரு சிஷ்யன், ராஜாநடை என பல படங்கள் அக்காலக்கட்டத்தில் நல்ல வசூலைப் பெற்றது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழித்திரைப்படங்களில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
மேலும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.
நடிகை சீதாவின் சினிமா வாழ்க்கை பாழாய் போனதற்கு முக்கிய காரணமே இவருடைய திருமண வாழ்க்கை தான் என கூறப்படுகிறது.
திருமணம்
நடிகை சீதாவும் தமிழ் சினிமாவில் பன்முகத்திறமையைக் கொண்ட பார்த்திபனும் பாரதி கண்ணம்மா, வருவாயென, புதிய பாதை போன்ற திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள்.
இதன்பிறகு நடிகர் பார்த்திபனும் சீதாவும் வெகுகாலமாக காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அத்துடன் ஆண் குழந்தையொன்றையும் தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.
இந்நிலையில், 11 வருட திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2001ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.
அதன் பிறகு நடிகை சீதா தனது 43வது வயதில் டிவி நடிகர் சதீஷை 2011ல் மறுமணம் செய்து கொண்டார். ஆனால் அவர்களும் சிறிது காலம் கழித்து பிரிந்துவிட்டனர்.
இந்நிலையில், நடிகை சீதாவின் முதல் கணவர் பார்த்திபன் தனது மனைவி குறித்து சில விஷயங்களை பற்றி கூறியிருந்தார் என சீதா தெரிவித்திருந்தார்.
என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்
இந்நிலையில் அண்மையில் நடிகை சீதா நேர்காணல் ஒன்றில் பேசிய போது, தனது மனைவியின் அதிக எதிர்பார்ப்புதான் எங்கள் பிரிவுக்கு காரணம் என கூறியதாக ஒரு கேள்வி கேட்டிருந்தார்.
அதற்கு பதிலளித்த சீதா, என்னுடைய குடும்பம் சிறிய குடும்பம். என்னைப் பொருத்தவரை சினிமாவை போல என் புருஷன் எனக்கு மட்டும் தான் என ஒரு மனைவியாக நான் நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது. இதைத் தான் நான் எதிர்ப்பார்த்தேன். என் எதிர்ப்பார்ப்பில் என்ன தவறு இருக்கிறது எனக் கூறியுள்ளார்.