சூடாக ஹோட்டல் சுவையில் கோதுமை பரோட்டா...வீட்டிலேயே செய்வது எப்படி?
அனைவரும் ஓட்டலில் சென்று விரும்பி சாப்பிடும் உணவு பரோட்டா.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பரோட்டா என்றால் மிகவும் பிடித்தமான உணவாக உள்ளது.
இதனை ஹோட்டல் சுவையில் வீட்டில் செய்வது எப்படி என்று பார்க்கலம்.

அதுவும் ஆரோக்கியமான முறையில் கோதுமையைப் பயன்படுத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கோதுமை மாவு – 1 கப்
- உப்பு, எண்ணெய் – தேவைக்கு
- நெய் – 3 டேபிள்ஸ்பூன்

செய்முறை
கோதுமை, உப்பு, நெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து 1 மணி நேரம் ஊறவைக்கவும்.
மாவை சம அளவு உருண்டைகளாக பிரித்து, ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்தி பலகையில் எண்ணெய் தடவி திரட்டவும்.

அதன் மீது எண்ணெய் தடவி சிறிது கோதுமை மாவை தூவி, இரு பக்கமும் பிடித்துக் கொண்டு விசிறி போல் மடித்து வட்டமாக சுருட்டவும்.
இதை உள்ளங்கையில் வைத்து அழுத்தி சற்று கனமான பராத்தாவாக திரட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு நெய் விட்டு இருபுறமும் நன்கு வெந்து பொன்னிறமாக வந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.
